SBI vs ICICI vs HDFC: பொதுத்துறை வங்கிகளாகட்டும், தனியார் வங்கிகளாகட்டும், வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கில் மாதவாரியாக குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிப்பதை வழக்கமாக வைத்துள்ளன.
பொதுத்துறை வங்கிகளாகட்டும், தனியார் வங்கிகளாகட்டும், வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கில் மாதவாரியாக குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் அவர்களுக்கு அபராதம் விதிப்பதை வழக்கமாக வைத்துள்ளன.
ஆனால், அபராதத் தொகை வங்கிக்கிளை அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து மாறுகிறது. அதாவது கிராமப்புறக் கிளையாக இருந்தால், அபராதம் குறைவாகவும், நகர்புறக் கிளையாக இருந்தால் சற்று அதிகமாகவும், பெருந்கரங்களாக இருந்தால் அதிகமாகவும் அபராதம் விதிக்கப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, சேமிப்புக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைக்காவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதில்லை. கடந்த 2020ம் ஆண்டிலிருந்து குறைந்தபட்ச இருப்பு பராமரி்க்காத வாடிக்கையாளர்களுக்கு அபாரதம் விதிப்பதை எஸ்பிஐ வங்கி கைவிட்டுள்ளது.
இதற்கு முன் கிராமப்புறங்கள் முதல் பெருநகரங்கள் வரை ரூ.5 முதல் ரூ.15வரை அபராதம் விதித்தது எஸ்பிஐ வங்கி. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் எஸ்பிஐ வங்கி கிளையைப் பொறுத்து குறைந்தபட்ச இருப்பு ரூ.3000, ரூ.2000, ரூ.1000 பணம் வைத்திருக்க வேண்டும்.
அதேபோல எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கில் அதிகமான பணம் வைத்திருந்தால், அதிகமான முறை கட்டணமின்றி ஏடிஎம்களில் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக எஸ்பிஐ வாடிக்கையாளர் ஒருவர் சேமிப்புக்கணக்கில் ரூ.ஒரு லட்சம் வரை பணம் வைத்திருந்தால், எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம்.

ஹெச்டிஎப்சி
ஹெச்டிஎப்சி வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதம் சராசரியாக ரூ.10ஆயிரம் மெட்ரோ நகரக் கிளைகளில் வைத்திருக்க வேண்டும். நகர்புறக் கிளைகளில் ரூ.5ஆயிரம் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும். கிராமப்புறக் கிளைகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் ரூ2,500 குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும்.
குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதத்தை ஹெச்டிஎப்சி வங்கி விதிக்கிறது. அந்த வகையில் ரூ.7500க்கு மேல் ரூ.10ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால் ரூ.150 அபராதம். ரூ.5ஆயிரத்துக்கு மேல் ரூ.7500க்கு கீழ் இருந்தால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும். ரூ.2500க்கு மேல் ரூ.5000க்குள் இருந்தால் ரூ.450 அபராதம், நகர்ப்புறங் கிளையில் ரூ.150 அபராதமும் விதிக்கப்படும்.ரூ.2500க்கு மேல் ரூ.7500க்கு மேல் இருந்தால், ரூ.450 அபாரதமும், ரூ.2500க்குள் குறைந்தபட்ச இருப்பு இருந்தால் ரூ.600 அபராதமும், நகர்ப்புறக் கிளைகளில் ரூ.300 அபாரதமும் விதிக்கப்படும்.

ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி 2022, பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு கணக்கிற்கும் ஒவ்வொருவிதமாக குறைந்தபட்ச இருப்பு நிர்ணயித்துள்ளது. வழக்கமான சேமிப்புக்கணக்கிற்கு, மெட்ரோகிளைகளில் கணக்கு வைத்திருந்தால், ரூ.10ஆயிரம் குறைந்தபட்ச இருப்பு இருக்க வேண்டும். நகர்பபுறக் கிளைகளில் ரூ.5ஆயிரம், கிராமப்புறங்களில் ரூ.2 ஆயிரம் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும்.
குறைந்தபட்ச இருப்பை சேமிப்புக்கணக்கில் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை அல்லது ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
