இந்தியாவின் கிராமப்புற, நகர்ப்புற வறுமைக்கான இடைவெளி குறைந்து வருகிறது: எஸ்பிஐ ஆய்வில் தகவல்!!
எஸ்பிஐ 20232-23 ஆம் ஆண்டின் மக்கள் நுகர்வு தொடர்பான ஆய்வு மேற்கொண்டது. இதில் பல்வேறு புதுமையான தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஸ்பிஐ நடத்திய ஆய்வில் 20232-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை 7.2%மாகவும், நகர்புறங்களில் வறுமை 4.6% ஆகவும் குறைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுவே 2011-12ஆம் ஆண்டு கால கட்டங்களில் முறையே 25.7%, 13.7%ஆக இருந்தது தெரிய வந்துள்ளது. நாட்டின் அடிமட்ட மக்களின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
எஸ்பிஐ நடத்திய ஆய்வின்படி, கிராமப்புறங்களில் தனிமனித செலவினம் அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு உதவியாக இருக்கும் என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளது. அதாவது, ஏழைகளில் ஜாதி, மத, வருமான வித்தியாசம் இல்லாமல் செலவினம் செய்வது அதிகரித்து வந்துள்ளது. தனி குடும்ப செலவினமும் அதிகரித்துள்ளது.
டிசம்பர் காலாண்டில் ஜிடிபி எதிர்பார்த்ததை விட 7 சதவீதம் அதிகமாக இருக்கும்!
2018-19ஆம் ஆண்டில் இருந்து கிராமப்புறங்களில் வறுமை சுமார் 4% குறைந்து வந்துள்ளது. இதுவே நகர்ப்புறங்களில் கொரோனா பாதிப்புக்குப் பின்னர் 1.70% குறைந்து வந்துள்ளது. எஸ்பிஐ ஆய்வின்படி கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவுக்கான (MPCE) இடைவெளி தற்போது 71.2% ஆக உள்ளது. இதுவே, 2009-10ல் 88.2% ஆக இருந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் அரசு எடுத்து இருக்கும் நடவடிக்கைகள் காரணமாக மக்களின் வாங்கும் திறனும், செலவிடும் திறனும் அதிகரித்து இருக்கிறது.
குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் கிராமங்களில் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், கிராமங்களில் நுகர்வு ரீதியான சமத்துவம் சமூக மக்களிடையே எந்தவித வேறுபாடும் இல்லாமல் அதிகரித்து வந்துள்ளது. இது கிராமங்களில் 0.365 லிருந்து 0.343 ஆக குறைந்துள்ளது.
இதேபோன்று கிராமப்புற மற்றும் நகர்ப்புற நுகர்வு ஒரே அளவில் அதிகரித்து வருகிறது. கிராமப்புறத்தில் இது 2.66% ஆகவும், நகர்ப்புறங்களில் இது 2.59% ஆகவும் இருக்கிறது. கிராமப்புற, நகர்ப்புற நுகர்வு இடைவெளி சதவீத அடிப்படையில் குறைந்து வருகிறது.
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற தனிநபர் நுகர்வு இடைவெளி குறைவாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்த இடைவெளி 43%ஆக இருக்கிறது. இதுவே, சத்தீஸ்கர், அசாம், குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது.
Today Gold Rate in Chennai : தொட்டால் ஷாக்கடிக்கும் தங்கம் விலை.. இன்று கிடுகிடுவென உயர்வு!