sbi mclr rate : நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அனைத்து கால வரம்புகளுக்கான கடன் வழங்குவதற்கான இறுதிநிலைச் செலவு(எம்சிஎல்ஆர்) விகித்ததை 10 புள்ளிகள் அதாவது 0.1% உயர்த்தியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அனைத்து கால வரம்புகளுக்கான கடன் வழங்குவதற்கான இறுதிநிலைச் செலவு(எம்சிஎல்ஆர்) விகித்ததை 10 புள்ளிகள் அதாவது 0.1% உயர்த்தியுள்ளது.
கடன் இஎம்ஐ உயரும்
இதனால் வங்கியில் கடன் பெற்றிருப்பவர்களின் மாதந்தோறும் செலுத்தும் இஎம்ஐ கட்டணம் இனிவரும் மாதங்களில் உயரக்கூடும். எஸ்பிஐ வங்கி உயர்த்திவிட்ட நிலையில் அதைத் தொடர்ந்து அனைத்து பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் உயர்த்தக்கூடும்.

எம்சிஎல்ஆர்
எம்சிஎல்ஆர் அல்லது மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட் அடிப்படையிலான கடன் வழங்கும் முறை என்பது கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் முறை. இது ரிசர்வ் வங்கியால் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குபின் வழங்கப்படும் அனைத்து கடன்களும் எம்சிஎல்ஆர் படி இருக்கும்
எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இஎம்ஐ கட்டணம் உயரும், மற்ற பெஞ்ச்மார்க் அடிப்படையில் வாங்கியவர்களுக்கு உயராது. எஸ்பிஐ வங்கியின் இபிஎல்ஆர் விகிதம் 6.65 சதவீதமாகவும், ரெப்போ அடிப்படையிலான கடன்விகிதம்(ஆர்எல்எல்ஆர்) 6.25 சதவீதமாகவும் கடந்த 1ம் தேதி முதல் தொடர்ந்து வருகிறது

வீட்டுக்கடன் வாகனக் கடன்
வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடனை தனிநபர் ஒருவருக்கு வங்கிகள் வழங்கும்போது, இபிஎல்ஆர், ஆர்எல்எல்ஆர் ஆகியவற்றுக்கு கூடுதலாக கிரெடிட் ரிஸ்க் ப்ரீமியம் அடிப்படையில் கடன் வழங்கும்.இதன்படி திருத்தப்பட்ட எம்சிஎல்ஆர் விகிதம் கடந்த 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி இதற்கு முன் 7 சதவீதமாக இருந்த எம்சிஎல்ஆர் ரேட் இனிமேல் 7.10சதவீதமாக அதிகரிக்கும்.
ஒருமாதம் மற்றும் 3 மாத எம்சிஎல்ஆர் 10 புள்ளிகள் அதிகரித்து 6.75 சதவீதமும், 6 மாதத்துக்கான எம்சிஎல்ஆர் ரேட் 7.05 சதவீதமும் அதிகரிக்கும். ஆனால், பெரும்பாலும் ஒர் ஆண்டு கடனில்தான் எம்சிஎல்ஆர் ரேட் இருக்கும். 2 ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் ரேட் 0.1 சதவீதம் அதிகரித்து 7.30 சதவீதமும், 3 ஆண்டுக்கான எம்சிஎல்ஆர் 7.40 சதவீதமும் அதிகரிக்கும்.
