SBI hikes interest rates on fixed deposits upto 20 bps : நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி, ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்பு நிதிக்கான வட்டி வீதத்தை 20 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி, ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்பு நிதிக்கான வட்டி வீதத்தை 20 புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

நாட்டின் பணவீக்கம் 7.79 சதவீதமாக ஏப்ரல் மாதம் உயர்ந்து ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை மீறியது. இதையடுத்து, மே மாத தொடக்கத்தில் ரெப்போ ரேட் வீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியது ரிசர்வ் வங்கி. அதன்பின் இம்மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டிவீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது. 

இதையடுத்து, ஒவ்வொரு வங்கியும் கடனுக்கான வட்டி வீதத்தையும், டெபாசிட்களுக்கான வட்டியையும் உயர்த்தி வருகின்றன. அதன்படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான வைப்பு நிதிக்கான வட்டியை 20 புள்ளிகள் உயர்த்தியுள்ளது.

காலம்

பொதுமுதலீட்டாளர்கள்

மூத்த குடிமக்கள்

7-45 நாட்கள் வரை

2.90 % வட்டி

3.40 % வட்டி

46-179 நாட்கள் வரை

3.90 %

4.40 %

180 முதல் 210 நாட்கள்வரை

4.40 %

4.90 %

211 முதல் ஓர் ஆண்டு வரை

4.60 %

5.10 %

ஓர் ஆண்டு முதல் 2 ஆண்டு

5.30 %

5.80 %

2 முதல் 3 ஆண்டுகள்

5.35 %

5.85 %

3 முதல் 5 ஆண்டுகள்

5.45 %

5.95 %

5 முதல் 10 ஆண்டுகள்

5.50 %

6.30 %

ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் வெளியிட்டப்பட்ட புள்ளிவிவரத்தில் 211 நாட்கள் முதல் ஓர் ஆண்டுவரை வைப்புத் தொகைக்கு 4.6 சதவீதம் வட்டியும், ஓர் ஆண்டு முதல் 2 ஆண்டுகள்வரையிலான வைப்புத் தொகைக்கு வட்டி 5.3 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.