ஸ்டேட் வங்கியில் குறுகிய கால கடனுக்கு வட்டி விகிதம் குறைப்பு
ஸ்டேட் வங்கி MCLR எனப்படும் கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் குறைப்பதாக அறிவித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) அக்டோபர் 15 முதல் நவம்பர் 15, 2024 வரை குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அறிவித்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் எம்சிஎல்ஆர் (MCLR) வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்துள்ளது. மற்ற வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை.
திருத்தப்பட்ட வட்டி விகிதம் அக்டோபர் 15, 2024 முதல் அமலுக்கு வருகிறது. MCLR விகிதங்கள் 8.20% முதல் 9.1% வரம்பிற்குள் வருமாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மாதத்திற்கான வட்டி விகிதம் 8.45% இலிருந்து 8.20% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 25 புள்ளிகள் குறைந்துள்ளது.
ஆறு மாத MCLR 8.85% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வருட MCLR 8.95% ஆக திருத்தப்பட்டுள்ளது. இரண்டு வருட MCLR 9.05% ஆகவும், மூன்று வருட MCLR 9.1% ஆகவும் உள்ளது.
வங்கியில் க்ரெடிட் ஸ்கோர் அதிகரிக்க என்ன செய்யணும்? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!
ஒரு வங்கி கடன் வழங்க அனுமதிக்கும் மிகக் குறைந்த வட்டி விகிதம் MCLR என அழைக்கப்படுகிறது. பாரத ஸ்டேட் வங்கியின் அடிப்படை விகிதம் செப்டம்பர் 15, 2024 முதல் 10.40% ஆக உள்ளது. பெஞ்ச்மார்க் பிரைம் லெண்டிங் ரேட் (BPLR) செப்டம்பர் 15, 2024 முதல் ஆண்டுக்கு 15.15% ஆக மாற்றப்பட்டுள்ளது.
SBI வீட்டுக் கடன் மீதான EBLR விகிதம் 9.15% ஆக உள்ளது. இது ஆர்பிஐ ரெப்போ விகிதம் 6.50% + 2.65% என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீட்டுக் கடன்களில், கடன் பெறுபவரின் CIBIL ஸ்கோரைப் பொறுத்து வட்டி விகிதங்கள் 8.50% முதல் 9.65% வரை மாறுபடும்.