Asianet News TamilAsianet News Tamil

3 கேமராக்கள்! சீன போன்களுக்கு போட்டியாக களம் இறங்கியது சாம்சங்!

சாம்சங் நிறுவனம், இதுவரை இல்லாத வகையில் 3 பிரைமரி கேமராக்களை கொண்ட கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

Samsung Galaxy A7... triple rear cameras
Author
Delhi, First Published Sep 24, 2018, 1:05 PM IST

சாம்சங் நிறுவனம், இதுவரை இல்லாத வகையில் 3 பிரைமரி கேமராக்களை கொண்ட கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. தென் கொரியாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங், கேலக்ஸி ஏ வகையில் ஏ7 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் முதலில், ஐரோப்பா மற்றும் ஆசிய சந்தைகளில் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலும் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.Samsung Galaxy A7... triple rear cameras

24 எம்.பி. பிரைமரி சென்சார், f/1.7 அப்ரேச்சர், 8 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 120 டிகிரி வைடுலென்ஸ், 5 எம்.பி. மூன்றாவது கேமரா லென்ஸ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,650ஆக இருக்கும் என கூறப்படுகிறது ப்ளு, பிளாக், கோல்டு மற்றும் பிங்க் நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில், செல்ஃபி எடுக்க 24 எம்.பி. கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. Samsung Galaxy A7... triple rear cameras

இத்துடன் செல்ஃபி ஃபோக்கஸ், ப்ரோ லைட்டிங் மோட் மற்றும் ஏ.ஆர். எமோஜி ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. மெட்டல்ஃபிரேம் மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வசதி உள்ளது. Samsung Galaxy A7... triple rear cameras

 

சாம்சங் கேலக்ஸி ஏ7 சிறப்பம்சங்கள்

1) 6.0 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே

2) 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்

3) 4 ஜிபி ரேம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி

4) 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

5) ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ

6) டூயல் சிம் ஸ்லாட்

7) 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா

8) 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7

9) 5 எம்.பி. மூன்றாவது கேமரா, f/2.2

10) 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

11) பக்கவாட்டில் கைரேகை சென்சார்

12) டால்பி அட்மோஸ்

13) 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

14) 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி

15) அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

Follow Us:
Download App:
  • android
  • ios