ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரால், உலகச்சந்தையில் கோதுமைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் இதைப்பயன்படுத்தி இந்தியா கோதுமையை  அதிகமாக ஏற்றுமதிசெய்யும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரால், உலகச்சந்தையில் கோதுமைக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் இதைப்பயன்படுத்தி இந்தியா கோதுமையை அதிகமாக ஏற்றுமதிசெய்யும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

இந்தியாவில் உள்ள சர்வதேச ஏற்றுமதியாளர்களும், உள்நாட்டு ஏற்றுமதியாளர்களும் கோதுமையைக்கொள்முதல் செய்து நல்லவிலைக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

மத்திய அரசிடம்தற்போது 2.42 கோடி டன் கோதுமை இருக்கிறது. இந்தியாவிடம் இருக்க வேண்டிய இருப்பு கோதுமை அளவைவிட, இருமடங்கு அதிகமாகவே மத்திய அரசு கைவசம் வைத்திருக்கிறது. ஆதலால், இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதியை அதிகப்படுத்த வேண்டும்

உலகளவில் கோதுமைக்கான தேவையில் கால்பகுதியை ரஷ்யா, உக்ரைன் நாடுகள்தான் நிறைவேற்றி வைக்கின்றன. உலகளவில் கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா முதலிடத்தில்இருக்கிறது, சர்வதேசஏற்றுமதியில் 18% ரஷ்யா வைத்திருக்கிறது

கடந்த 2019ம் ஆண்டு ரஷ்யா, உக்ரைன் சேர்ந்து உலகின் கோதுமைத்தேவையில் 25.4% நிறைவு செய்யும் அளவு ஏற்றுமதி செய்தனர். எகிப்து, துருக்கி, வங்கதேசம் ஆகிய நாடுகள்தான் ரஷ்யாவிடம் இருந்து அதிகமாக கோதுமையை இறக்குமதி செய்யும் நாடுகளாகும்.

அதிலும் உலகிலேயே கோதுமையை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு எகிப்துதான். ஆண்டுக்கு 400 கோடி டாலரை செலது செய்து 10 கோடி மக்களுக்கு உணவு வழங்குகிறது. எகிப்தின் கோதுமை தேவையில் 70% ரஷ்யா, உக்ரைன் நாடுகள் தீர்த்துவைக்கின்றன.

துருக்கியிலும் கோதுமையின் தேவை அதிகம் இருக்கிறது. அந்நாட்டின் 74% தேவையை ரஷ்யா, உக்ரைன் தீர்த்து வைக்கின்றன. ஆண்டுதோறும் 160 கோடிக்கு கோதுமையை இறக்குமதி செய்கிறது. 

ஆதலால் உக்ரைன், ரஷ்யா இடையிலான போரால் இரு நாடுகளும் கோதுமை ஏற்றுமதி செய்ய முடியாது. மேலும் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை, நிதித்தடையால், ஏற்றுமதி செய்வதும் கடினம். ஆதலால், இந்த வாய்ப்பை இந்திய ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக்கொண்டு இந்தியாவிலிருந்து கோதுமையை உலக நாடுளுக்கு ஏற்றுமதி செய்யலாம்.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ உக்ரைன்-ரஷ்யா இடையிலானபோரால், இந்தியாவிலிருந்து அதிகமான கோதுமை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

அதிகமான கோதுமையை கப்பல் மூலம் அனுப்ப முடியும். மத்திய அரசிடம் தேவைக்கும் இருமடங்கு அதிகமாக 2.42 கோடி டன் கோதுமை இருக்கிறது. உக்ரைனிலிருந்து இந்தியா விலங்குகளின் கொழுப்பையும், சூரியகாந்தி எண்ணெய், எண்ணெய் வித்துக்களை இறக்குமதிசெய்கிறது. ஆனால், இருநாடுகளுக்கு இடையிலான ஏற்பட்ட சிக்கல், இந்தியாவின் ஏற்றுமதியை பாதிக்காது” எனத் தெரிவித்தார்