ஜி20 நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவை குற்றம்சாட்டிப் பேசியதாக அந்நாட்டு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஜி20 நிதியமைச்சர்கள் கூட்டத்தில் சில நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ரஷ்யாவைக் கண்டித்துப் பேசியதாக அந்நாட்டு அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பெங்களூருவில் பிப்ரவரி 24-25 ஆகிய இரு நாட்களும் ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் ஜி20 நாடுகளின் மத்திய வங்கி உயர் அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமர்வு ஒன்றில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதற்குக் எதிராக சில நாட்டுப் பிரதிநிதிகள் பேசியதாகத் தெரிகிறது.
எல்ஐசிக்கு முதல்முறையாக இழப்பு | அதானி குழும பங்குகளில் முதலீட்டின் மதிப்பு ரூ.50,000 கோடி சரிவு
ஓர் அமர்வில் “நீங்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும், உக்ரைனில் நடந்த தாக்குதல்களுக்கு தனிப்பட்ட முறையில் நீங்கள்தான் பொறுப்பு என்பதை நாங்கள் மறக்கமாட்டோம்” என்று கூறப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர். ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் சார்பில் கலந்துகொண்டவர்கள் இவ்வாறு ரஷ்யாவைக் கண்டிக்கும் விதமாகப் பேசினர் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக ஜெர்மனி அதிகாரிகளைத் தொடர்புகொண்டபோது தாங்கள் அப்படி எதுவும் கூறவில்லை என்று மறுத்துள்ளனர். அதே நேரத்தில் கனடா தரப்பிலிருந்து இதற்கு எவ்வித பதிலும் வரவில்லை.

“மேற்கத்திய நாடுகள் அமைதியைப் பற்றி பேசும்போது, அவர்கள் மற்றவர்களுடன் பேசும் விதத்தில் கொஞ்சம் பொறுப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற ஒரு உயர்மட்ட நிகழ்வில், அச்சுறுத்தும் தொனியிலான பேச்சை நாங்களோ வேறு யாருமோகூட எதிர்பார்க்கவில்லை” என்று ரஷ்ய அதிகாரிகள் சொல்கிறார்கள்.
ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கோல்ஸ் டெல்லி வந்தார்: பிரதமர் மோடியுடன் சந்திப்பில் முக்கிய உடன்பாடு
இந்தியாவில் நடைபெறும் வேறு ஜி20 நிகழ்வுகளில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. அடுத்த வரவிருக்கும் மிக முக்கியமான நிகழ்வு மார்ச் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் டெல்லியில் நடைபெறும் ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்புதான். இந்த நிகழ்வில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளிங்கனும் கலந்துகொள்வார்.
இதற்கிடையில், பிளின்கன் வெள்ளிக்கிழமை அட்லாண்டிக் இதழுக்குப் அளித்த பேட்டியில், ரஷ்யாவுடனான நேரடித் தொடர்பில் மற்ற நாடுகளைவிட இந்தியா அதிக செல்வாக்கு கொண்டது என்றும் இந்தியா சீனாவுடன் இணைந்து, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக ரஷ்யாவை வற்புறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா ரஷ்யாவுடனான கூட்டணியில் இருந்து விலகி அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடனான கூட்டணிக்கு நகரும் பாதையில் இருப்பதாகவும் பிளிங்கன் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்.
பனை வெல்லம், நாட்டுச் சர்க்கரைக்கும் 5% ஜிஎஸ்டி வரி: ஏஏஆர் அறிவிப்பு
