Russia-Ukraine War: 200 வகை பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை: அமெரிக்காவை அலறவிட்ட ரஷ்யா
Russia-Ukraine War:உக்ரைன் மீது போர் தொடுத்தமைக்காக ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பொருளாதாரத் தடை விதித்த நிலையில் அதற்கு பதிலடியாக 200 வகையான பொருட்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா தடைவிதித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்தமைக்காக ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் பொருளாதாரத் தடை விதித்த நிலையில் அதற்கு பதிலடியாக 200 வகையான பொருட்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா தடைவிதித்துள்ளது.
பொருளாதாரத் தடை
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து, அந்நாட்டின் மீது அமெரி்க்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பொருளாதார ரீதியாக ரஷ்யாவை ஒதுக்கி வைக்கும் நடவடிக்கையை மேற்கு நாடுகள் எடுத்தன.
விற்பனைத் தடை
அதுமட்டுமல்லாமல், ரஷ்ய வங்கிகள் உலக நாடுகளுடன் வங்கிப் பரிமாற்றத்துக்குஉதவும் ஸ்விப்ட் முறையைப் பயன்படுத்தவும் மேற்கத்திய நாடுகள் தடை விதித்தன. டாலரில் வர்த்தகம் செய்யவும், ஏற்றுமதி, இறக்குமதி செய்யவும் அமெரிக்கா தடைவிதித்தது. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கி நகரத் தொடங்கியது. மேற்கு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள், கார் தயாரிப்பு, உணவு தயாரிப்பு நிறுவனங்களும் ரஷ்யாவில் விற்பனை செய்தவதை நிறுத்துவதாக அறிவித்தன.
கச்சா எண்ணெய் விலை
இ்தனால் ரஷ்யாவின் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் என்னஆகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யாவிட்டால், மேற்கத்திய நாடுகள் கடுமையாகபாதிக்கும், விலை கடுமையாக உயரும் என்ற அச்சம் நிலவியது. இதனால் கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலையும் 140 டாலர் வரை அதிகரித்தது.
ஆனால், ஐக்கிய அரபு அமீரகம், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் களமிறங்கி, கச்சா எண்ணெய் தேவையை நிறைவேற்றுவதாகத் தெரிவித்துள்ளன. இதனால் அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளுக்கு கச்சா எண்ணெயால் வரும் சிக்கலும் நீங்கியது.
200 பொருட்கள்
இதையடுத்து, மேற்கத்திய நாடுகளுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவிலிருந்து 200 வகையான பொருட்களின் ஏற்றுமதியை இந்தஆண்டுவரை தடை செய்து ரஷ்ய அரசு நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
என்னென்ன பொருட்கள்
இந்த தடையில் எந்திரங்கள், மின்னணு பொருட்கள், கார்கள், உதரிபாகங்கள், உணவுப் பொருட்கள், வேளாண் உபகரணங்கள், மருந்துப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ரயில் எஞ்சின்கள், ரயில் பெட்டிகள், கண்டெய்னர்கள், டர்பைன்கள், உலோகங்கள், விலை உயர்ந்த கற்கள், கட்டிங்எந்திரங்கள், வீடியோ டிஸ்ப்ளே, ப்ரஜெக்டர், கன்சோல், ஸ்விட்போர்டு என 200 வகையான பொருட்கள் இந்த ஆண்டு இறுதிவரை மேற்கு நாடுகளுக்கும்,பிறநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ரஷ்ய அரசு தடை விதி்த்துள்ளது.
ஆனால், யூரோசியா பொருளாதாரக் கூட்டமைப்பில் உள்ள அப்காஜியா, தெற்கு ஆசெட்டியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரப்பொருட்கள்
மேலும், பல்வேறு வகையான மரங்கள், மரப்பொருட்கள், மரத்தில் செய்யப்பட்ட பெட்டிகள் என எந்த பொருட்களையும் ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
உக்ரைன் பதிலடி
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டில் உள்ள ரஷ்யாவுக்குச் சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். ரஷ்ய குடிமக்கள், ரஷ்ய அரசுக்கு சொந்தமாக எந்த சொத்துக்கள் இருந்தாலும் இழப்பீடு ஏதும் தராமல் அதை கைப்பற்ற அதிகாரிகளுக்கு ஜெலன்ஸ்கி உத்தரவிட்டார்.