RE Anniversary Edition: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் GT 650 ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் GT 650 மாடல்களின் 120th Anniversary Edition மாடல்களை 2021 EICMA நிகழ்வில் காட்சிப்படுத்தியது. பின் இந்த மாடல்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது இவை ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 

இந்தியாவை போன்றே ஐரோப்பாவிலும் இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. ஐரோப்பாவில் இரு மாடல்களின் ஃபிளாஷ் விற்பனை மார்ச் 7 ஆம் தேதி துவங்குகிறது. மொத்தத்தில் இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் 60 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. 

புதிய 120th Anniversary Edition மாடல்களில் பிளாக் குரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் முற்றிலும் பிளாக்டு-அவுட் என்ஜின் மற்றும் எக்சாஸ்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஃபிளை ஸ்கிரீன், என்ஜின் கார்டுகள், ஹீல் கார்டுகள், பார் எண்ட் மிரர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஸ்டாண்டர்டு மாடல்களில் இவை ஆப்ஷனல் அக்சஸரீக்களாகவே வழங்கப்பட்டு வந்தன.

இத்துடன் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் டேன்க் மீது விசேஷ பேட்ஜ் வைக்கப்பட்டுள்ளது. இவை கைகளாலேயே உருவாக்கப்பட்டவை ஆகும். மேலும் இவற்றில் பிரத்யேக குறியீட்டு எண் ஒவ்வொரு யூனிட்டிற்கும் வித்தியாசமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 120th Anniversary Edition லோகோவில் காண்டிராஸ்ட், கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. 

இவைதவிர இரு மாடல்களிலும் 649சிசி பேரலெல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் டியூனிங்கிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இத்துடன் சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் ஹார்டுவேர் அம்சங்கள் இவற்றின் ஸ்டாண்டர்டு மாடல்களில் உள்ளதை வழங்கப்பட்டு இருக்கிறது.