Asianet News TamilAsianet News Tamil

Royal Enfield Classic 650: டெஸ்டிங்கில் சிக்கிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 -அக்சஸரீ லிஸ்ட் பயங்கரமா இருக்கே

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின கிளாசிக் 650 மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. 

Royal Enfield Classic 650 Spied With Touring Accessories
Author
Tamil Nadu, First Published Feb 15, 2022, 11:42 AM IST

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 650 ப்ரோடக்‌ஷன் ரெடி மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த மாடலில் டூரிங் அக்சஸரீக்கள் உள்ளன. இந்த மாடலில் டூரிங்-ஃபிரெண்ட்லி ஹேண்டில்பார் செட்டப், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட்கள் உள்ளிட்டவை தெளிவாக காணப்படுகின்றன.

இருபுறங்களிலும் ஸ்டிரெயிட் லைன் பைப்கள் உள்ள. முன்புறம் மற்றும் பின்புற ஃபெண்டர்கள் தற்போதைய கிளாசிக் 350 மாடலில் உள்ளதை போன்றே சன்க்கியாக உள்ளது. இந்த மாடலில் ஸ்போக் வீல்களே வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் வட்ட வடிவ ஹெட்லேம்ப் மற்றும் வட்ட வடிவ எல்.இ.டி. டெயில் லேம்ப், இண்டிகேட்டர்களலில் ஹாலோஜன் பல்புகள் வழங்கப்பட்டுள்ளன.

Royal Enfield Classic 650 Spied With Touring Accessories

ஸ்பை படங்களில் ஒரு மாடலில் மட்டும் அலாய் வீல்கள், குரோம் கிராஷ் பார்கள், ஆக்சிலரி பார்கள், யு.எஸ்.டி. ஃபோர்க்குகள், விண்ட் ஸ்கிரீன், சற்றே வித்தியாச டிசைனில் பேனியர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள டாப் பாக்ஸ் அதன் ப்ரோடோடைப் மாடலில் இருந்ததை போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில் இந்த மாடல் சூப்பர் Meteor 650 ஆக இருக்கும் என தெரிகிறது. 

புதிய ராயல் என்ஃபீல்டு மாடலின் சேசிஸ், பாடி பேனல்கள், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் உள்ளிட்டவை 650 டுவின் மாடல்களில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். இந்த மாடலிலும் 648சிசி, பேரலெல் டுவின் சிலிண்டர், ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் 47 பி.எஸ். பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

Royal Enfield Classic 650 Spied With Touring Accessories

இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உள்ளிட்டவை 650 டுவின் மாடல்களில்  உள்ளதை போன்றே ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படலாம். ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 மாடலில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், கூகுள் பவர்டு ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம் வழங்கப்படலாம். பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் வழங்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios