ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க ஸ்பிரிட் ஆஃப் எக்டசி மஸ்கோட் தோற்றத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ரி-டிசைன் செய்யப்பட்ட ஸ்பிரிட் ஆஃப் எக்டசி மஸ்கோட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திம் 111 ஆண்டுகள் பழைய ஸ்பிரிட் ஆஃப் எக்டசி மஸ்கோட் அந்நிறுவனம் காப்புரிமை பெற்று பயன்படுத்தி வரும் சின்னம் ஆகும். புதிய மஸ்கோட் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலில் வழங்கப்பட இருக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஸ்பெக்டர் என அழைக்கப்படுகிறது. இது ரோல்ஸ் ராய்ஸ் வரலாற்றில் சிறந்த ஏரோடைனமிக் கார் என்ற பெருமையை பெறும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏரோ திறனை மேலும் சிறப்பானதாக மாற்ற ஸ்பிர்ட் ஆஃப் எக்டசி மஸ்கோட் அளவில் சிறியதாகவும், அதிகளவு டைனமிக் ஸ்டான்ஸ் உடன் ரி-மாடல் செய்யப்பட்டு இருக்திறது. இதன் தோற்றம் சார்லஸ் ஸ்கைஸ் கைவண்ணத்தில் உறுவான உண்மை வரைபடங்களில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும்.
புதிய மஸ்கோட் தற்போதைய மஸ்கோட்டை விட 17mm வரை அளவில் சிறியதாகவும், உயரம் 82.7mm அளழில் இருக்கிறது. இதன் இறக்கைகள் மேலும் ஏரோடைனமிக் ஆகவும், அசலாகவும் காட்சியளிக்கும் வகையில் ரி-ஷேப் செய்யப்பட்டு உள்ளது. தற்போது மஸ்கோட் ஸ்டான்ஸ் வேகத்தை பரைசாற்றும் வகையில் மாற்றப்பட்டு இருக்கிறது.

"இனி, அவள் உண்மை வேகத்தின் கடவுள். வேகத்திற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டு, ஒரு கால் முன்வைத்து சற்றே கீழே குனிந்து, எதிர்வரும் பாதையை அவளின் கண்கள் கவனமுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றன," என ரோல்ஸ் ராய்ஸ் தெரிவித்து உள்ளது.
மஸ்கோட் அழகில் மேலும் கவனம் செலுத்த, ரோல்ஸ் ராய்ஸ் அதன் தலைமுடி, ஆடைகள், போஸ், உணர்வு உள்ளிட்டவைகளுக்கு பிரத்யேக ஸ்டைலிஸ்ட்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறது. வழக்கமான வேக்ஸ்-கேஸ்டிங் வழிமுறைக்கு பின் ஒவ்வொரு ஸ்பிரிட் ஆஃப் எக்டசியும் கைகளால் இறுதிக்கட்ட ஃபினிஷ் செய்யப்படுகின்றன. இதனால் ஒவ்வொன்றும் தனி சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
ஸ்பெக்டர் எலெக்ட்ரிக் மாடலுக்கு பின் வெளியாகும் ரோல்ஸ் ராய்ஸ் மாடல்களில் புதிய ஸ்பிரிட் ஆஃப் எக்டசி மஸ்கோட் வழங்கப்படுகிறது. தற்போதைய ஃபேண்டம், கோஸ்ட், ரைத், டான் மற்றும் கலினன் போன்ற மாடல்களில் தற்போதைய மஸ்கோட் வழங்கப்பட்டு இருக்கிறது.
