ராபர்ட் கியோசாகி, வெள்ளியின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை இரட்டிப்பாகும் என்று கணித்துள்ளார். தற்போது ஒரு அவுன்ஸ் $34 ஆக இருக்கும் வெள்ளி, இந்த ஆண்டு $70 வரை உயரும் என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.99 ஆக உள்ளது.
Silver Rate Robert Kiyosaki Prediction: ராபர்ட் கியோசாகியின் (Robert Kiyosaki) "Rich Dad Poor Dad" புத்தகம் உலகெங்கிலும் உள்ள நிதி சார்ந்த மற்றும் ஈகுவிட்டி இன்வெஸ்டிங் முதலீட்டில் ஆர்வம் இருப்பவர்களுக்கு நல்ல கருத்துக்களை அளித்து வருகிறது. இந்தப் புத்தகத்தின் முதல் பிரதி 1997 இல் வெளியிடப்பட்டது.
இந்தியா போன்ற நாடுகளில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். குறைந்தது மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்கின்றனர். இவர்களுக்கு உரிய விளக்கம் இவரது புத்தகத்தில் கிடைத்து வருகிறது. இவர் தற்போது, வெள்ளியின் விலை எந்தளவிற்கு உயரும் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
கியோசாகி தனது புத்தகத்தில், ''ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் பணத்திற்காக வேலை செய்கிறார்கள். பணக்காரர்களிடம் அவர்களுக்காக வேலை செய்ய பணம் இருக்கிறது'' என்கிறார். அதாவது சம்பளத்தை மட்டுமே நம்பி இருக்காமல், முதலீடு செய்ய வேண்டும் கொள்கையை எடுத்துரைக்கிறார். பணம் வைத்து இருப்பவர்களுக்கு அவர்களது முதலீட்டின் மூலம் அவர்கள் தூங்கிக் கொண்டு இருக்கும்போது கூட பணம் வளருகிறது என்கிறார்.
வெள்ளி விலை உயருமா?
இதை வைத்து பார்க்கும்போது முதலீடு ஒவ்வொருவருக்கும் அவசியமானது. தற்போது தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.1 லட்சத்தை நெருங்கிவிட்டது. இத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வெள்ளி விலையும் ராக்கெட் வேகத்தில் உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த ஆண்டு வெள்ளி விலை இரட்டிப்பாகும் என்று ரிச் டாட் பூர் டாட் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி கூறியுள்ளார்.
பென்ஷன் தாமதமானால் 8% வட்டி கிடைக்கும்! வங்கிகளுக்கு RBI உத்தரவு!
Silver Rate in India - supply and demand:
ராபர்ட் கியோசாகி சமூக ஊடக தளமான X இல் வெள்ளிக்கான தேவை அதிகமாக உள்ளது. ஆனால் விநியோகம் குறைவாக உள்ளது என்று பதிவிட்டார். இதன் காரணமாக, இந்த உலோகம் இன்று மிகவும் பிரபலமான முதலீடாக மாறியுள்ளது. வெள்ளியின் விலை தற்போது ஒரு அவுன்ஸ் (28.3495231 கிராம்) ஒன்றுக்கு $34 (ரூ. 2,924.44) என்று கியோசாகி கூறினார். இது அதன் எல்லா நேர உயர்விலிருந்து 60% குறைந்துள்ளது. "இந்த ஆண்டு வெள்ளியின் விலை இரட்டிப்பாகி ஒரு அவுன்ஸ் குறைந்தது 70 டாலர் ஆக இருக்கும் என்று நான் யூகிக்கிறேன்," என்று கியோசாகி X இல் எழுதியுள்ளார். நான் சமீபத்தில் குடியரசு நாணய பரிமாற்றத்திலிருந்து அதிக வெள்ளியை வாங்கினேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் வெள்ளியின் விலை என்ன?
இந்தியாவில் திங்கட்கிழமை வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.99. ஞாயிற்றுக்கிழமை ஒரு கிராமுக்கு ரூ.100 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளியைப் பற்றிப் பேசினால், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,900. ஞாயிற்றுக்கிழமை, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1 லட்சமாக இருந்தது.
