வங்கி கடன் வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதம் 0.25 % குறைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்த உள்ளது ரிசர்வ் வங்கி .

அதாவது, ரெப்போ மதிப்பை 35 அடிப்படை புள்ளிகள குறைத்தால், 5.40% இலிருந்து 5.15 % வாக  குறைந்து உள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்தி காந்த தாஸ் பொறுப்பேற்ற பிறகு நான்காவது  முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, வீடு வாகனம், தொழில், தனி நபர் கடன் என அனைத்திற்கும் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் பயனடைய வாய்ப்பு உள்ளது. மேலும் வீடும் வாகனம் வாங்கி  உள்ளவர்களும் வட்டி விகிதம் குறைந்து உள்ளதால், மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.