repo rate : rbi monetary policy : ரிசர்வ் வங்கியின் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் குறுகியகாலக் கடனுக்கான ரெப்போ வட்டிவீதத்தை 11-வது முறையாக இன்றும் மாற்றவில்லை
ரிசர்வ் வங்கியின் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் குறுகியகாலக் கடனுக்கான ரெப்போ வட்டிவீதத்தை 11-வது முறையாக இன்றும் மாற்றவில்லை.
2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றையடுத்து, கொண்டுவரப்பட்ட லாக்டவுனில், அதாவது, 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது.
இன்று 11-வது நிதிக்கொள்கைக் குழுக்கூட்டம் நடந்துள்ளது. இதுவரை வட்டி வீதம் மாற்றப்படவில்லை. தற்போது குறுகியகாலக் கடனுக்கான வட்டி வீதம் 4 % என்றும், ரிவர்ஸ் ரெப்போ 3.5% என்றும் நீட்டித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்தில் முக்கிய 10 அம்சங்கள்
- குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ ரேட் வீதம் மாற்றமில்லாமல் தொடர்ந்து 4% அளவிலேயே நீடிக்கிறது
- 2022-23ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும். கடந்த நிதிக்கொள்கைக் கட்டத்தில் 7.8 சதவீதமாக மதிப்பிடப்பட்டது. ஆனால், கச்சா எண்ணெய் விலை சுமையால், பொருளாதார வளர்ச்சி குறையும்
- வங்கிகளுக்கு இறுதிநிலை கடன்வசதி எனப்படும் எம்எஸ்எப் வீதம் மற்றும் வங்கி வட்டி வீதம் தொடர்ந்து 4.25 சதவீதத்திலேயே இருக்கும். எல்ஏஎப் வசதியை 50 புள்ளிகள் வரை வைத்துள்ளது
- சர்வதேச அளவில் ஏற்படும் சம்பவங்களால் நாட்டின் நிதிச்சூழல் பாதிக்கப்படையாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை ரிசரவ்வங்கி எடுத்து சமநிலைப்படுத்தும்.
- கொரோனா பெருந்தொற்றிலிருந்து மெல்ல மெல்ல இந்தியப் பொருளாதாரம் மீள்கிறது. ஆதலால் ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.5 சதவீதத்திலேயே இரு்கும்
- நடப்பு நிதியாண்டில் நாட்டின் சராசரி பணவீ்க்கம் 5.7 சதவீதமாக இருக்கும். இதற்கு முன்பு 4.5 சதவீதம் என மதிப்பிடப்பட்டிருந்தது.
- ரிசர்வ் வங்கியிடம் தேவையான அளவுக்கு அந்நியச் செலவாணி கையிருப்பு இருக்கிறது. ஆதலால், பொருளாதாரத்தில் ஏற்படும் பின்னடைவுகளில் இருந்து ரிசர்வ் வங்கி பாதுகாக்கும்
- ராபி பருவத்தின் விளைச்சல் கிராமப்புறங்களின் தேவை அதிகரிப்புக்கு ஆதரவு அளிக்கும். நகர்பபுற தேவைகள் நேரடியான சேவைகள் மூலம் ஊக்கப்படுத்தப்படும்.
- கடன் அளிப்பதற்கான கடன் மதிப்பு தரம்(எல்டிவி) 2023ம் ஆண்டு மார்ச் 31 ம்தேதி வரை தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் தனிநபர் வீட்டுக் கடன் பெறுவது எளிதாக அமையும்.
- பெருந்தொற்றிலிருந்து உலகப் பொருளாதாரம் மீண்டு வரும்நிலையில் ரஷ்யா உக்ரைன் போர் பொருளாதார வளர்ச்சி்க்கு அழுத்தத்தை அளித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அரசுக்கு பெரும் சமையாக இருக்கும்
இவ்வாறு சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்
