Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் எட்டு லட்சம் யூனிட்கள் மைல்கல் எட்டி மாஸ் காட்டிய ரெனால்ட்

பிரென்ச் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் வாகனங்கள் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளது.

Renault surpasses 8 lakh customers milestone in India
Author
Tamil Nadu, First Published Feb 9, 2022, 12:29 PM IST

பிரென்ச் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ரெனால்ட் இந்திய சந்தையில் 8 லட்சம் வாடிக்கையாளர்கள் எனும் புது மைல்கல் எட்டியுள்ளது. இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் பத்து ஆண்டுகளுக்கு முன் களமிறங்கியது. இந்த காலக்கட்டத்தில் நாட்டில் கணிசமான வளர்ச்சியை ரெனால்ட் பதிவு செய்து வருகிறது. 

"இந்தியா விற்பனையில் எட்டு லட்சம் மைல்கல் கடந்துள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். இது மிகவும் சிறப்பான பயணமாக இருக்கிறதகு. எங்களின் வாடிக்கையாளர்கள், டீலர்கள், வினியோகஸ்தர்கள், ஊழியர்கள், உற்பத்தி மற்றும் பொறியியல் துறை குழுக்கள் வழங்கி வரும் இணையற்ற உதவிக்கும், பிராண்டு மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி கூற விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் சிறந்த அடித்தளம் அமைத்து இருக்கிறோம்." 

Renault surpasses 8 lakh customers milestone in India

"ஒன்றிணைந்து உறுதியான திட்டத்தின் மூலம் மிக நேர்த்தியான முடிவுகளை வியாபாரத்தின் அனைத்து பிரிவுகளிலும் ரெனால்ட் எடுத்து வருகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சீரான பிராண்டு அனுபவத்தை வழங்குகிறோம். இவை அனைத்தும் இந்தியாவில் ரெனால்ட் வளர்ச்சிக்கு காரணியாக அமைந்துள்ளன," என்று ரெனால்ட் இந்தியா தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மமிலப்பல்லே தெரிவித்தார். 

ஒட்டுமொத்த சந்தையிலும் கடுமையான சூழல் ஏற்பட்டு இருந்தாலும், கிகர் மாடல் விற்பனையில் கணிசமான பங்குகளை பெற்றுத் தந்தது. இந்தியாவில் ரெனால்ட்  எண்ட்ரி லெவல் மாடலான குவிட் விற்பனையில் நான்கு லட்சம் யூனிட்களை கடந்துள்ளது. மேலும் மேக் இன் இந்திய திட்டத்தில் ரெனால்ட் தொடர்ந்து பங்கேற்று வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios