Reliance Jio share: ril results : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 2021-22ம் நிதியாண்டின் கடைசி காலாண்டு நிகர வருவாய் 22.9 சதவீதம் அதிகரித்து ரூ.4,313 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் தொடர்ந்து 3-வது காலாண்டாக வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 2021-22ம் நிதியாண்டின் கடைசி காலாண்டு நிகர வருவாய் 22.9 சதவீதம் அதிகரித்து ரூ.4,313 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் தொடர்ந்து 3-வது காலாண்டாக வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
வருவாய் பெருக்கம் மற்றும் டேட்டா பயன்பாட்டில் ரிலையன்ஸ் ஜியோ வளர்ந்து வந்தாலும், புதிய வாடிக்கையாளர்கள் வருகை குறைந்து மற்றும் வாடிக்கையாள்கள் இழப்பு அதிகரித்து வருகிறது. 2022 மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர் சேர்க்கை 1.09 கோடி குறைந்து, 41.02 கோடியாகச் சரிந்துள்ளது.

செயல்பாட்டிலிருந்து கிடைக்கும் வருவாய் 21.8 சதவீதம் அதிகரித்து ரூ.22,261 கோடியாக அதிகரித்துள்ளது. சராசரியாக ஒரு வாடிக்கையாளர் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கிடைக்கும் வருவாயும் ரூ.167.60 ஆக அதிகரித்துள்ளது, அதாவது 4-வது காலாண்டில் 21.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மொபைல் நிறுவனங்கள் அனைத்தும் கட்டணத்தை உயர்த்தியதையடுத்து, இந்த வருவாய் உயர்வு ஏற்பட்டுள்ளது. வட்டி, வரிச்செலவு, கடனுக்கான செலவு ஆகிய செலவுக்கு முன்பாக வருவாய் 27.4 சதவீதம் அதிகரித்து, ரூ.10,918 கோடியாக அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் “ 5ஜி சேவையை சோதனை முயற்சியாக 8 மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறோம். உச்சகட்டமாக 1.5 பிபிஎஸ் பயன்படுத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மார்ச் மாத காலாண்டு நிகர லாபம் 22.5சதவீதம் அதிகரி்த்து, ரூ16ஆயிரத்து 203 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டு கடைசி காலாண்டில் ரூ.13,277 கோடியாக இருந்தது.
