Sebi fines Reliance: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் யூனிட்டில் கடந்த 2020ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் 570 கோடி டாலர் முதலீடு செய்ததை மறைத்தமைக்காக பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு நிறுவனமான செபி ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் யூனிட்டில் கடந்த 2020ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் 570 கோடி டாலர் முதலீடு செய்ததை மறைத்தமைக்காக பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு நிறுவனமான செபி ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் இரு அதிகாரிகளுக்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் 570 கோடி டாலர்களை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பிளாட்ஃபார்மில் முதலீடு செய்தது. சிறிய வணிகர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பேமெண்ட் சர்வீஸை எளிமைப்படுத்த ஜியோ உதவும் என்பதற்காக இந்த முதலீடு செய்யப்பட்டது. ஏற்கெனவே பெரும் கடன் சுமையில் இருந்த முகேஷ்அம்பானி, பேஸ்புக்கின் முதலீட்டால் பெரும் கடன் சுமையிலிருந்து மீண்டார்.
ஆனால், ஃபேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் டிஜிட்டல் யூனிட்டில் முதலீடு செய்தது நாளேடுகள், இணையதளங்கள், சேனல்களில் செய்தியாக வெளியாகின. ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் இதை அதிகாரபூர்வமாக செபி அமைப்பிடம் தெரிவித்தவில்லை. ஃபேஸ்புக் மற்றும் ரிலையன்ஸ் இடையே எந்தமாதிரியான நிதி ஒப்பந்தங்கள் நடந்துள்ளன, பங்கு கைமாற்றம், பங்குவிற்பனை ஆகியவை குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் செபி அமைப்பிடம் ஃபேஸ்புக் முதலீடு குறித்து எந்தவிதமான தகவலையும் கூறாத ரிலையன்ஸ்நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது. செபி நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் “ ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை பங்குப் பரிமாற்றம், விலைநிலவரம் குறித்த எந்தத் தகவலையும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.அது குறித்து தெளிவுபடுத்தவும் இல்லை.

செபிக்கு நாளேடுகள், உள்ளிட்ட பிறவாய்ப்புகள் மூலம் தகவல்கள் கிடைத்தபின்பும்கூட ரிலையன்ஸ் விளக்கமளிக்கவில்லை. இது அந்தநிறுவனம் தனது பொறுப்பை துறந்தது தெரியவருகிறது. ஆதலால், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், இரு அதிகாரிகளுக்கும் சேர்த்து ரூ.30 லட்சம் அபராதம்(38522டாலர்) விதிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
