உலகமே டிஜிட்டல்மயமாகிக்கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. ஸ்மார்ட் டிவிக்கள், வாட்ச்சுகள், ஸ்மார்ட்ஃபோன்கள், லேப்டாப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் கூட டிஜிட்டலாகிவிட்டன. புதிய அப்ளிகேஷன்கள் மற்றும் மென்பொருள்களின் உதவியுடன் தொழில்நுட்பம் நமது வாழ்வுமுறையை எளிமையாக்கிவிட்டது.

அப்படியிருக்கையில், உங்கள் கார் மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கக்கூடாது? உலகின் முன்னணி சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், கார்களில் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திவருகிறது. அதனால் பயன்படுத்துபவர்களுக்கு எளிதான, பாதுகாப்பான முறையில் வடிவமைக்கப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸின் E-Class ரக கார் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டது. டிசைன், பாதுகாப்பு, நிலைத்தன்மை, புதுமை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் மிகச்சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டி லுக் மற்றும் ஃபினிஷிங்குடன்   மாஸ்டர்பீஸ் தயாரிப்பு. E-Classன் மெர்சிடிஸ் மீ கனெக்ட் டெக்னாலஜி லேட்டஸ்ட் அப்டேட்.

மெர்சிடிஸ் பென்ஸின் மெர்சிடிஸ் மீ கனெக்ட் டெக்னாலஜி, மற்ற சொகுசு கார்களிலிருந்து மெர்சிடிஸ் பென்ஸை வித்தியாசப்படுத்துகிறது.

குரலின் மூலம் வீட்டில் இருந்துகொண்டே காரை இயக்கலாம்: அமேசான் அலெக்ஸா அல்லது கூகுள் ஹோம் ஆப்களில் ஒன்றை உங்கள்  காரில் மெர்சிடிஸ் பென்ஸ் ஆப்புடன் இணைத்துவிட்டால், உங்கள் வீட்டின் சோஃபாவில் அமர்ந்துகொண்டே உங்கள் காரை இயக்கலாம். உங்கள் வாய்ஸ் கமெண்ட்ஸின் மூலம் காரை லாக் செய்யலாம்.

மெர்சிடிஸ் மீ ஆப்-பின் மொபைல் ஒருங்கிணைப்பு:

மெர்சிடிஸ் மீ கனெக்ட் ஆப் மிகவும் திறன் வாய்ந்த அப்ளிகேஷன். கீழ்வரும் அம்சங்களை பயன்படுத்த உதவும். 

* டயரில் காற்று, எரிபொருள் அளவு, கார் கேபினின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது, பிரேக்கின் நிலை.

* மெர்சிடிஸ் மீ கனெக்ட் ஆப் மூலம் உங்கள் மெர்சிடிஸ் பென்ஸ் காரை சரியான இடத்தில் பார்க் செய்யலாம்.

* நேவிகேஷன், போக வேண்டிய இடம் ஆகியவற்றிற்கான வழிமுறைகளை மெர்சிடிஸ் மீ ஆப் வழங்கும்.

மெர்சிடிஸ் மீ கனெக்ட் ஆப் மூலம் மியூசிக் பிளேயிங், டிராஃபிக் தகவல், அவசரகால உதவி ஆகியவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்