மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த டிஜிட்டர் ருபி திட்டத்தால் கறுப்புப்பணப் புழக்கம் தடுக்கப்படுமா என்பதற்கு மத்திய நிதியமைச்சகம் பதில்அளித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த டிஜிட்டர் ருபி திட்டத்தால் கறுப்புப்பணப் புழக்கம் தடுக்கப்படுமா என்பதற்கு மத்திய நிதியமைச்சகம் பதில்அளித்துள்ளது.
2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்தார்.
அதில் கிரிப்டோகரன்சிகள் மீது முதலீடு செய்பவர்கள், அதிலிருந்து முதலீட்டு லாபம்பார்ப்பவர்களுக்கு 30 சதவீதம் வரிவிதிப்பை அறிமுகப்படுத்தினார். அதோடு மட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கி தரப்பில் சிபிடிசி எனப்படும் டிஜிட்டல் ருபி உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

ரிசர்வ் வங்கி தரப்பில் உருவாக்கப்படும் டிஜிட்டல் ருபி குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தனியார் வெளியிடும் கிரிப்டோகரன்சி போன்று இல்லாமல் நிலையான மதிப்புடன், அரசின் அங்கீகாரத்துடன், சட்டப்பாதுகாப்புடன் இந்த டிஜிட்டல் ருபி இருக்கும் என்றுமட்டும் முதல்கட்டதகவல் கிடைத்துள்ளது.
ஆனால், டிஜிட்டல் ருபி புழக்கத்துக்கு வந்துவிட்டால் கறுப்புப்பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துமா அல்லது தடுக்குமா என்ற கேள்வி எழுந்தது.
அதுகுறித்து நிதிஅமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஏஎன்ஐசெய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ ரிசர்வ் வங்கி தரப்பில் அடுத்த நிதியாண்டில் வெளியிடப்படும் டிஜிட்டல் ருபியால் நிச்சயமாக டிஜிட்டல் பொருளாதாரத்துக்குபெரிய ஊக்கமாக அமையும்.
இதற்கான ஒவ்வொரு கட்டத்திலும் பரிசோதனை முயற்சியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது.
![]()
டிஜிட்டல் ருபி புழக்கத்துக்கு வரும்போது, கறுப்புப் பணப் புழக்கத்தை நிச்சயமாகக் கட்டுப்படுத்த பெரும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். ஒரு கடைக்காரரிடம் இருந்து ஏதேனும் பொருளை வாங்கிவிட்டு, அதை டிஜிட்டல் பணம் மூலம் வழங்கலாம்.
கடைக்காரரும் டிஜிட்டல் பணத்தை வேறு யாருக்கேனும் வழங்க முடியும். டிஜிட்டல் ருபியின் அனைத்து பரிமாற்றங்கள் விவரங்களையும் ரிசர்வ் வங்கி வைத்திருக்கும். இதனால், டிஜிட்டல் ருபி மூலம் நடக்கும் ஒவ்வொரு பரிமாற்றமும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கொண்டுவரப்படும். வரி ஏய்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது.
கறுப்புப்பணத்தின்அளவும், புழக்கமும் குறையும். டிஜிட்டல் ருபியை வைத்துக்கொள்ளவதும், பராமரிப்பதும் எளிது” எனத் தெரிவித்தார்
