Asianet News TamilAsianet News Tamil

rbi mpc meeting: ஜூன்8ம் தேதி RBI நிதிக்கொள்கைக் கூட்டம்: வட்டிவீதம் எவ்வளவு உயரும்? ஓர் பார்வை

rbi mpc meeting :ரிசர்வ் வங்கியின் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் நாளை(ஜூன் 8ம் தேதி) நடக்க இருக்கும் நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதம் கடுமையாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

rbi policy: repo rate: RBI MPC:  Monetary policy decision tomorrow: What to expect?
Author
Mumbai, First Published Jun 7, 2022, 12:57 PM IST

rbi mpc meeting :ரிசர்வ் வங்கியின் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் நாளை(ஜூன் 8ம் தேதி) நடக்க இருக்கும் நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதம் கடுமையாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதனால், வீட்டுக்கடன், வாகனக் கடன் வாங்கியிருப்போர் அதிகமான தொகையைக இஎம்ஐ செலுத்த வேண்டி வரும். நாட்டில் பணப்புழக்கம் கடுமையாகக் குறையும். 

rbi policy: repo rate: RBI MPC:  Monetary policy decision tomorrow: What to expect?

நாட்டின் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இலக்கு வைத்திருந்தது. ஆனால், 2022 ஜனவரி முதல் மார்ச் மாதம்வரை பணவீக்கம் 6சதவீதத்தைக் கடந்தது. அதிலும் ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக உயர்ந்தது. இதையடுத்து, அவசரமாக முடிவு எடுத்த ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தில் 40 புள்ளிகளை உயர்த்தியது

இதனால் கடனுக்கான வட்டிவீதம் 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக அதிகரித்தது. வட்டி வீதம் அதிகரித்தபோதிலும்கூட எதிர்பார்த்த அளவு உணவுப்பொருட்கள், காய்கறிகள் விலை குறையவில்லை. மததிய அரசும்  பெட்ரோல்,டீசல் உற்பத்தி வரியைக் குறைத்தது. அவ்வாறு குறைத்தும் பணவீக்கம் இன்னும் குறையவில்லை. 

இதனால் நாளை நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான வட்டி வீதம் 40 புள்ளிகள் முதல் 50 புள்ளிகள்வரை ரிசர்வ் வங்கி உயர்த்தலாம். அல்லது சராசரியாக 50 புள்ளிகள் உயர்வு இருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியைவிட, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவே அதிகமான முக்கியத்துவத்தை ரிசர்வ் வங்கி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

rbi policy: repo rate: RBI MPC:  Monetary policy decision tomorrow: What to expect?

நாளை நிதிக்கொள்கைக் கூட்டத்தில் 5 விதமான அம்சங்களை ரிசர்வ் வங்கி கருத்தில் கொள்ளும்.

ரெப்போ ரேட்: 

நாளை நடக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் பணவீக்கத்தைக் குறைக்கும் வகையில் வட்டி வீதம் உயர்த்தப்பட உள்ளது. குறைந்தபட்சம் 40 புள்ளிகள் முதல் 50 புள்ளிகள் வரை வட்டிவீதம் உயரலாம் எனத் தெரிகிறது. இப்போதுள்ள சூழலில் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவே முன்னுரிமை அளி்க்கும், அதன்பின்புதான் பொருளாதார வளர்ச்சி. மக்களின் தேவைஅதிகரிக்க வேண்டும், பணவீக்கம் கட்டுப்படுத்த வேண்டும்.
ரெப்போ ரேட் உயரும் பட்சத்தில் கடனுக்கான வட்டி அதிகரிக்கும். வாகனக் கடன்,வீட்டுக்கடன் வாங்கியிருப்போருக்கு வட்டி செலுத்துவது அதிகரிக்கும். 

rbi policy: repo rate: RBI MPC:  Monetary policy decision tomorrow: What to expect?

பணவீக்கம் இலக்கு மாறலாம்

பணவீக்கத்தை கட்டுப்படுத்த 2 சதவீதம் முதல் 6 சதவீதம்வரை ரிசர்வ் வங்கி இலக்கு வைத்திருந்தது. சில்லரைப் பணவீக்கமும், மொத்தவிலைப் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. வட்டிவீதத்தை என்னதான் ரிசர்வ் வங்கி உயர்த்தினாலும் இன்னும் சில மாதங்களுக்கு பணவீக்கம் தொடர்ந்து இருக்கும். ஆதலால், 6 சதவீதத்துக்குள் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது எனும் இலக்கு மாற்றப்படும் எனத் தெரிகிறது. 

ரொக்க கையிருப்பு வீதம் உயரும்:

வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்கும் ரொக்க இருப்பு அளவு உயர்த்தப்படும். சிஆர்ஆர் எனப்படும் ரொக்க கையிருப்பு வீதம் உயர்ந்தால்தான், வங்கிகளின் கையிருப்பில் இருக்கும் பணம் குறையும், கடன் கொடுக்கும் அளவு குறையும், பணப்புழக்கத்தைகுறைக்க முடியும். ஆதலால் ரொக்கக் கையிருப்பு வீதம் 25 புள்ளிகள் வரை உயரலாம். 

rbi policy: repo rate: RBI MPC:  Monetary policy decision tomorrow: What to expect?

வளர்ச்சி தியாகம்

நாட்டில் இப்போதுள்ள சூழலில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தினாலே பொருளாதாரம் இயல்புக்கு வந்துவிடும்.ஆதலால் வளர்சிக்கு ஆதரவு என்ற கொள்கையை சிறிது காலத்துக்கு ரிசர்வ் வங்கி தள்ளிவைக்கும். இன்னும் சிறிது காலத்துக்கு கடனுக்கான வட்டிவீதம் தொடர்ந்து உயரக்கூடும். தொழில்துறை பாதிக்கும் என்று மத்திய அரசு கூறினாலும், ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வு நடவடிக்கையை தடுக்க முடியாது. 

பணப்புழக்கம் சுருங்கும்

கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி திடீரென வட்டி வீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியதற்கு வங்கி முறைக்குள் ரூ.80 கோடி பணம் உள்ளே இழுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. அதாவது நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பணத்தில் அளவில் ரூ.80ஆயிரம் கோடி வங்கிக்குள் கொண்டுவரப்படும். நாளையும் வட்டிவீதம் 40 முதல் 50 புள்ளிகள் உயர்ந்தால், புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவில் ரூ.ஒரு லட்சம் கோடி  உள்ளே இழுக்கப்படும். இதனால், பணத்தில் அளவு குறைந்து, அடுத்துவரும் மாதங்களில் பணவீக்கம் படிப்படியாகக் குறையலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios