Asianet News TamilAsianet News Tamil

கடனுக்கான வட்டிவீதத்தில் மாற்றம் இருக்குமா? நாளை ரிசர்வ் வங்கியின் நிதிக்குழுக் கூட்டம்

2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் நாளை தொடங்கி இருநாட்கள் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கடனுக்கான வட்டிவீதம் குறைக்கப்படுமா அல்லது உயர்த்தப்படுமா என்பது குறித்த முக்கிய முடிவு அறிவிக்கப்படும்

RBI Likely To Maintain Status Quo On Key Rates During Monetary Policy Panel Meet
Author
Mumbai, First Published Feb 7, 2022, 11:49 AM IST

2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் நாளை தொடங்கி இருநாட்கள் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கடனுக்கான வட்டிவீதம் குறைக்கப்படுமா அல்லது உயர்த்தப்படுமா என்பது குறித்த முக்கிய முடிவு அறிவிக்கப்படும்

2 மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கொரோனா பெருந்தொற்றையடுத்து, கொண்டுவரப்பட்ட லாக்டவுனில், அதாவது, 2020-ம் ஆண்டு மே 22-ம் தேதி வட்டி வீதம் வரலாற்றில் இல்லாத அளவு குறைக்கப்பட்டது. அதன்பின் 8முறை நிதிக்கொள்கைக் குழுக்கூட்டம் நடந்துள்ளது. இதுவரை வட்டி வீதம் மாற்றப்படவில்லை. தற்போது குறுகியகாலக் கடனுக்கான வட்டி வீதம் 4 % என்றும், ரிவர்ஸ் ரெப்போ 3.5% என்றும் நீடிக்கிறது. 

RBI Likely To Maintain Status Quo On Key Rates During Monetary Policy Panel Meet

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குறித்து முடிவு எடுக்கும் 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழு மும்பையில் இன்று கூடி விவாதிக்க இருந்தது. ஆனால், பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து மும்பையில் உள்ளூர் விடுமுறையாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இதனால் இன்று நடக்க வேண்டிய நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் நாளை முதல் 10ம் தேதிவரை நடக்கிறது. 

நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதத்தை அதிகப்படுத்தலாம் என்று ஒரு தரப்பினர் கூறினாலும், பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில், கடனுக்கான வட்டிவீதத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது. தொடர்ந்து 9-வது மாதமாக வட்டிவீதம் மாற்றமில்லாமல் இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநர் மதன் சப்னாவிஸ் கூறுகையில் “ சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டில் பணவீக்கம் ஆகியவை இருக்கிறது. பணவீக்கத்தைக் குறைக்க 25 புள்ளிகள் ரிவர்ஸ் ரெப்போ வீதத்தில் உயர்த்தப்படும்எ ன எதிர்பார்க்கிறோம்.

RBI Likely To Maintain Status Quo On Key Rates During Monetary Policy Panel Meet

ஆனால், கடனுக்கான வட்டிவீதமான ரெப்போ ரேட் வீதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் லேசாக சரிய வாய்ப்பிருப்பதால், 50 புள்ளிகள் வரை உயர்த்தப்படலாம் மற்றவகையில் ரெப்போ ரேட் வீதத்தில் மாற்றம் இருக்காது” எனத் தெரிவித்தார்

கோடக் மகிந்திரா வங்கியின் நுகர்வோர் பிரிவு தலைவர் சாந்தி ஏகாம்பரம் கூறுகையில் “ சர்வதேச அளவிலான பணவீக்க அழுத்தம், சர்வதேச வங்கிகள் நிதிக்கொள்கைகளை இறுக்குவது, கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டில் நிலவும்உயர்ந்த பணவீக்கம், உற்பத்தி உயர்வு, எம்பிசி ஆகியவை நிதிக்கொள்கை குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்.

RBI Likely To Maintain Status Quo On Key Rates During Monetary Policy Panel Meet

தற்போது ரெப்போ ரேட் வீதம் 4 சதவீதமாக இருக்கிறது, ரிவர்ஸ் ரெப்போ ரேட் வீதத்தை 25 புள்ளிகள்வரை உயர்த்தலாம் என எதிர்பார்க்கிறோம். ஆனால் ரெப்போ ரேட் வீதத்தில்மாற்றம் இருக்காது” எனத் தெரிவித்தார்

ஆதலால், வரும் நிதிக்கொள்கை குழுக் கூட்டத்தின் முடிவில் கடனுக்கான வட்டிவீதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பிருக்காது என்றே தெரிகிறது

Follow Us:
Download App:
  • android
  • ios