இந்திய ரிசர்வ் வங்கி நகை அடகுக்கான கடன் மதிப்பை உயர்த்தியுள்ளது. ரூ.2.5 லட்சம் வரை 85% வரையும், அதற்கு மேல் மாறுபட்ட விகிதங்களிலும் கடன் பெறலாம். இந்த மாற்றம் சிறு கடன் பெறுபவர்களுக்கு உதவும்.
நகை அடகு வைத்தால் 85% வரை பணம் பெறலாம் - அடித்தட்டு மக்கள் மகிழ்ச்சி!
நகையை அடகு வைத்து பணம் வாங்குவதற்கான மதிப்பை இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் நகை அடகு வைப்பவர்கள் இனிமேல் கூடுதலாக பணத்தை பெறலாம். தங்க நகைக் கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நகையை வைத்து கடன் வாங்குபவர்கள் இனி முன்பை விட அதிக பணத்தைப் பெற முடியும். இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ரூ. 2.5 லட்சம் வரை தங்கக் கடன் பெறுபவர்களுக்கு கடன் மதிப்பு (LTV) விகிதத்தை 85 சதவீதமாக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி. இந்த விகிதம் இதற்கு முன்னர் 75 சதவீதமாக இருந்தது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய அம்சங்கள்
ரூ.2.5 லட்சத்திற்குள் கடனுக்கு தற்போது 85% வரை பெற முடியும்.
ரூ.2.5 லட்சம் - ₹5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 80% LTV.
ரூ.5 லட்சத்திற்கு மேற்பட்ட கடன்களுக்கு 75% LTV நிலவுகிறது.
LTV கணக்கில் வட்டி தொகையும் சேர்க்கப்படும்.
இந்த மாற்றங்கள் சிறு கடன் பெறுபவர்கள் வசதிக்காக நிதி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் செய்யப்பட்டவை.
தங்கத்தின் மதிப்பீடு
தங்கத்தின் தூய்மையை (caratage) பொருத்து அதன் முந்தைய 30 நாட்களில் சராசரி முடிப்பு விலை அல்லது கடந்த நாளின் விலை அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். இது IBJA அல்லது SEBI ஒப்புதல் பெற்ற கமாடிட்டி எக்சேஞ்ச் மூலம் நிர்ணயிக்கப்படும்.
பாதுகாப்பு மற்றும் ஆதாரம்
தங்கம் அல்லது வெள்ளியை அடமானாக வைத்திருக்கும் அனைத்து கிளைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கட்டாயம்.கடன் முற்றிலும் அடைக்கப்பட்ட பிறகு, அடமனமான நகைகள் 7 வேலை நாட்களில் திருப்பிக் கொடுக்க வேண்டும். நகைகள் சேதமடைந்தால், பழுது பாராட்டு செலவினை கடன் நிறுவனம் ஏற்க வேண்டும்.
சட்ட திட்டங்கள் மற்றும் கடன் நெறிமுறைகள்
ரூ.2.5 லட்சத்துக்கு மேற்பட்ட கடன்களுக்கு விரிவான கடன் மதிப்பீடு கட்டாயம்.மாற்றுப்பெயர்களில் போலி விளம்பரங்களை வெளியிடக்கூடாது என RBI எச்சரிக்கை.2 ஆண்டுகள் கடந்தும் பெற்றவரால் வாங்கப்படாத நகைகள் ‘பிரதிபலிக்காத அடமானம்’ என கருதப்படும். தங்கக் கடன்களுக்கான கடன் மதிப்பு விகிதம் உயர்த்தப்பட்டால் அடமானம் வைக்கப்பட்ட தங்கம் ரூ.1 லட்சமாக இருந்தால், கடன் வாங்குபவர் இனி அதே தங்கத்தின் மீது ரூ. 75,000க்கு பதிலாக ரூ. 85,000 வரை கடன் பெற முடியும். அதாவது, இனி தங்கத்துக்கு அதிக கடன் கிடைக்கும்.
