rbi governer today : ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் பிற்பகல் 2 மணிக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் பிற்பகல் 2 மணிக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆனால், எதைப்பற்றிய அறிவிப்பாக இருக்கும் என்பது குறித்து ஏதும் தெரியவில்லை. இந்த அறிவிப்பால் 10 ஆண்டுக்கான கடன்பத்திரங்கள் 9பிபிஎஸ் உயர்ந்து 7.2% எட்டியது.

2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் முதல் அலை வந்தபோது ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் திடீர் அறிவிப்பு வெளியிட்டார். வட்டி வீதம் அதிரடியாக 40 பிபிஎஸ் குறைக்கப்பட்டது. 

கடந்த திங்கள்கிழமை ரிசர்வ் வங்கி சார்பில் நியமன உறுப்பினர்கள் ராஜீவ் ரஞ்சன் ஓய்வு பெற்றார். இவர் நிதிக்கொள்கைக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். அடுத்த நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் ஜூன் 6 முதல 8ம் தேதிவரை நடக்க உள்ளது.

ஏப்ரல் மாதம் நடந்த நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் ரஷ்யா-உக்ரைன் பிரச்சினை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து. இதனால் ஏற்பட்டபணவீக்கத்தை குறைக்கவே நிதிக்கொள்கைக் குழுவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, நாட்டின் வளர்ச்சி வீதம் குறைக்கப்பட்டது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் பணவீக்கம் 6.95சதவீதத்தை எட்டியது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப்பின் அதிகமாகும். பணவீக்கம் அதிகரித்துவருவதால், ஜூன் மாதம் நடக்க இருக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டிவீதம் அதிகரிக்கப்படலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். ஒருவேளை இன்றைய அறிவிப்பில் கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதற்கிடையே அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுக் கூட்டம் இன்று நடக்க இருக்கிறது.இந்தக் கூட்டத்தின் முடிவில் வட்டிவீதம் 30பிபிஎஸ் உயர்த்தப்படலாம். இதனால் பங்குச்சந்தையில் நிச்சயமாக எதிரொலிக்கும். இந்த சூழலில் ரிசர்வ் வங்கி கவர்னர் எதைப்பற்றி பேசப்போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது