இனி Paytm யூஸ் பண்ண முடியாதா? வங்கி சேவையை நிறுத்த ஆர்பிஐ போட்ட அதிரடி உத்தரவு!
பிரீபெய்ட் வசதிகள், வாலெட்கள், பாஸ்டேக், போக்குவரத்து அட்டை போன்றவற்றை வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பேடிஎம் வழங்கும் இந்த சேவைகளில் வைத்திருக்கும் பேலன்ஸ் தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆர்பிஐ கூறியிருக்கிறது.
இந்தியாவில் புகழ்பெற்ற ஆன்லைன் பேமெண்ட் செயலிகளில் ஒன்று பேடிஎம் (Paytm). தற்போது இதன் சேவையை 8.9 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட தணிக்கையில், ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறி செயல்பட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனால், பேடிஎம் நிறுவனத்தின் வங்கி சேவைகளை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு, வரும் பிப்ரவரி 29ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். அதாவது பிப்ரவரி மாதத்திற்குப் பின் பேடிஎம் செயலில் புதிதாக டெபாசிட் தொகையைப் பெறவோ, பரிவர்த்தனைகள் செய்யவோ, வாடிக்கையாளர்கள் கணக்குகளில் வரவு வைக்கவோ கூடாது.
பிரீபெய்ட் வசதிகள், வாலெட்கள், பாஸ்டேக், போக்குவரத்து அட்டை போன்றவற்றை வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பேடிஎம் வழங்கும் இந்த சேவைகளில் வைத்திருக்கும் பேலன்ஸ் தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆர்பிஐ கூறியிருக்கிறது.
ஏற்கெனவே இதுபோன்ற விதிமீறலில் சிக்கிய பேடிஎம் ஆர்பிஐ நடவடிக்கையைச் சந்தித்துள்ளது. 2022ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் பேடிஎம் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது.
பெங்களூரு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கும் boAt!