கடைசி எச்சரிக்கை : “கட்டாயமாகிறது ஸ்மார்ட் கார்டு“.. ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை உடனே இணையுங்க ..!!!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளின் ஆயுட்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடடைகிறது என்பதால், அடுத்த ஆண்டு முதல் புதிய ரேஷன் கார்டுகளை வழங்க திட்டமிடபட்டுள்ளது.

குறிப்பாக, அடுத்த ஆண்டு முதல், புதிய ரே‌ஷன்கார்டு ‘ஸ்மார்ட்கார்டு’ வடிவில் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என தமிழக உணவுத்துறை அறிவித்துள்ளது.

ஆனாலும், கண்டிப்பாக, ரேஷன் கார்டுடன் , ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக , தற்போது, 87 சதவீதம் இந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை இணைக்க நவ.1 தான் கடைசி நாள் என ஏற்கனவே காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகத நிலையில், சரியான காலக்கெடு நிர்ணயம் பற்றிய சரியான தகவல் தெரியவில்லை.......