MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • EPFO Pension: பிஎஃப் கணக்கில் 2 வருட 'இலவச போனஸ்'! தனியார் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

EPFO Pension: பிஎஃப் கணக்கில் 2 வருட 'இலவச போனஸ்'! தனியார் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

EPFO Pension: தனியார் நிறுவன ஊழியர்கள் 20 வருடம் அல்லது அதற்கு மேல் தொடர்ந்து பணிபுரிந்தால், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கூடுதலாக 2 வருட 'வெயிட்டேஜ் போனஸ்' வழங்குகிறது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 15 2026, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பிஎஃப் கணக்கில் 2 வருட 'இலவச போனஸ்'
Image Credit : x

பிஎஃப் கணக்கில் 2 வருட 'இலவச போனஸ்'

தனியார் துறையில் தொடர்ந்து வேலை செய்துவரும் ஊழியர்களுக்கு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிடம் (EPFO) இருந்து ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. உங்கள் பணிக்காலத்தில் குறைந்தபட்சம் 20 வருடங்கள் சேவையை நிறைவு செய்திருந்தால், ஓய்வுக்குப் பிறகு உங்களுக்குக் கிடைக்கும் மாதாந்திர பென்ஷனில் கணிசமான உயர்வு இருக்கும். EPFO விதிகளின்படி, 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சேவை செய்த ஊழியர்களுக்கு ஒரு சிறப்பு 'போனஸ்' பலன் கிடைக்கும்.

இந்த 2 வருட 'வெயிட்டேஜ் போனஸ்' விதி என்றால் என்ன?

ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS-95) கீழ் பென்ஷன் பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 வருடங்கள் சேவையாற்றி இருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், ஒரு ஊழியர் 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் EPS திட்டத்தில் பங்களித்திருந்தால், EPFO அவரது பென்ஷன் கணக்கீட்டின்போது கூடுதலாக 2 வருடங்களை 'போனஸ் சர்வீஸ்' (Service Weightage) ஆக இலவசமாகச் சேர்க்கிறது. அதாவது, நீங்கள் உண்மையில் 20 வருடங்கள் வேலை செய்திருந்தால், EPFO கணக்கீட்டின்போது உங்கள் மொத்த பென்ஷன் சேவைக் காலம் 22 ஆண்டுகளாகக் கருதப்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மாதாந்திர பென்ஷனை கணக்கிடுவது எப்படி?
Image Credit : ChatGPT

மாதாந்திர பென்ஷனை கணக்கிடுவது எப்படி?

மாதாந்திர பென்ஷன் எப்படி கணக்கிடப்படுகிறது? EPFO விதிகளின்படி, பென்ஷனைக் கணக்கிட ஒரு குறிப்பிட்ட ஃபார்முலா உள்ளது; மாதாந்திர பென்ஷன் = (பென்ஷன் சம்பளம் × பென்ஷன் சேவை) ÷ 70

இங்கே, 'பென்ஷன் சம்பளம்' என்பது உங்கள் கடைசி 60 மாத சேவையின் சராசரி சம்பளத்தைக் குறிக்கிறது. 'பென்ஷன் சேவை' என்பது நீங்கள் EPS திட்டத்திற்கு பங்களித்த மொத்த ஆண்டுகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

34
இதோ ஒரு கணக்கீடு
Image Credit : Asianet News

இதோ ஒரு கணக்கீடு

ஒரு ஊழியரின் பென்ஷனுக்கு தகுதியான சம்பளம் ரூ.15,000 என்றும், அவர் மொத்தம் 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்றும் வைத்துக்கொள்வோம். விதிகளின்படி, 20 ஆண்டுகளை நிறைவு செய்ததால் அவருக்கு 2 வருட போனஸ் கிடைக்கும். அதாவது, அவரது மொத்த பென்ஷனுக்குரிய சேவை 22 ஆண்டுகள். இப்போது ஃபார்முலாவில் கணக்கிட்டுப் பார்ப்போம்.

பென்ஷன் = (15,000 × 22) ÷ 70

பென்ஷன் = 3,30,000 ÷ 70

மொத்த மாதாந்திர பென்ஷன் = ₹4,714.28

அதாவது, நீங்கள் மொத்தம் 20 ஆண்டுகள் EPF/EPS திட்டத்தில் பங்களித்திருந்தால், இந்த உதாரணத்தின்படி 58 வயதில் ஓய்வு பெற்ற பிறகு, உங்களுக்கு மாதந்தோறும் சுமார் ரூ.4,714 பென்ஷன் கிடைக்கும்.

44
2 வருட வெயிட்டேஜ் போனஸ்
Image Credit : Gemini

2 வருட வெயிட்டேஜ் போனஸ்

EPFO திட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய தனியார் ஊழியர்களுக்கு, EPFO 2 வருட 'வெயிட்டேஜ் போனஸ்' வழங்குகிறது. இதனால், 20 ஆண்டுகள் பணியாற்றியவர்களின் மொத்த சேவைக் காலம் 22 ஆண்டுகளாகக் கருதப்படும்.

ரூ.15,000 என்ற அதிகபட்ச பென்ஷன் சம்பளம் உள்ள ஒரு ஊழியருக்கு, இந்த போனஸ் காரணமாக ஓய்வுக்குப் பிறகு மாதந்தோறும் சுமார் ரூ.4,714 பென்ஷன் கிடைக்கும். ஊழியர்கள் நிறுவனம் மாறும்போது பிஎஃப் பணத்தை முழுமையாக எடுக்காமல், 'ஸ்கீம் சர்டிஃபிகேட்' பெற்று சேவையைத் தொடர்ந்தால், 58 வயதில் இந்த கூடுதல் பென்ஷனின் முழுப் பயனையும் பெறலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)
வருங்கால வைப்பு நிதி திரும்பப் பெறுதல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
HRA Tax Exemption: ஒரு வீடு உங்களுக்கு.. மற்றொன்று பெற்றோருக்கு! வரிச்சலுகை விதிகள் என்ன?
Recommended image2
Indian Railways Income: ஒரு நாளைக்கு 24,000 ரயில்கள்.. இந்திய ரயில்வேயின் தினசரி வருமானம் எவ்வளவு தெரியுமா?
Related Stories
Recommended image1
EPFO: PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! 5 புதிய விதிகள் இதோ.!
Recommended image2
EPFO Alert: பிஎஃப் கணக்குதாரர்களே உஷார்..! போலி இணையதளங்கள் மூலம் பணம் பறிக்க வாய்ப்பு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved