today gold rate: தங்கம் விலை கிடுகிடு உயர்வு! மீண்டும் 38,000 ரூபாய்: வெள்ளி விர்ர்.. இன்றைய நிலவரம் என்ன?

நகைப் பிரியர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் தங்கம் விலை கிடுகிடுவென இன்று உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப்பின் சவரன் ரூ.38ஆயிரத்தைக கடந்துள்ளது.

rapid increase in the price of gold : check price in chennai, kovai, vellore and trichy

நகைப் பிரியர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் தங்கம் விலை கிடுகிடுவென இன்று உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப்பின் சவரன் ரூ.38ஆயிரத்தைக கடந்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 70ரூபாயும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது.  

குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக: ஆம்ஆத்மிக்கு 2 இடங்கள்: கருத்துக்கணிப்பில் தகவல்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,705 ஆகவும், சவரன், ரூ.37,640 ஆகவும் இருந்தது. 

rapid increase in the price of gold : check price in chennai, kovai, vellore and trichy

இந்நிலையில் செவ்வாய்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 70ரூபாய் அதிகரித்து, ரூ.4,775ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ரூ.38,200ஆக ஏற்றம் கண்டுள்ளது. 
கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,775ஆக விற்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப் வருது! இவ்வளவுதான விலை?

தங்கம் விலை கடந்த சில வாரங்களாகக் குறைந்து வந்தது நகைப்பிரியர்களுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் ஓரளவு மகிழ்ச்சியை அளித்தது. தங்கத்தை ஆர்வத்துடன் வாங்கினர். அவ்வப்போது விலை உயர்ந்தாலும் தங்கம் விலை பெரிதாக மாறவில்லை. 

இந்நிலையில்  இந்த வாரத்திலிருந்து தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.  தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது, இன்று சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து, சவரன் ரூ.38ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. பல வாரங்களாக தங்கம் விலை ரூ.38ஆயிரத்துக்கு கீழ் சரிந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.

rapid increase in the price of gold : check price in chennai, kovai, vellore and trichy

சூதாட்ட இணையதள விளம்பரங்களைத் தவிருங்கள்: செய்தி இணையதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

வெள்ளி விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 4 ரூபாய் 20 பைசா உயர்ந்து, ரூ.66.70ஆகவும், கிலோவுக்கு 4,200 ரூபாய் அதிகரித்து ரூ.66,700 ஆகவும் விற்கப்படுகிறது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios