railway:ரயில்வே துறையில் பல்வேறு மண்டலங்களில் மொத்தம் 1.49 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்

ரயில்வே துறையில் பல்வேறு மண்டலங்களில் மொத்தம் 1.49 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்தார்

ரயில்வேயில் காலியாக இருக்கும் பணியிடங்கள் குறித்த கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் நேற்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

1.49 லட்சம் காலியிடங்கள்

ரயில்வே துறையில் பல்வேறு மண்டலங்களில் ஒரு லட்சத்து 49ஆயிரம் பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதில் அதிகபட்சமாக வடக்கு மண்டலத்தில் 19,183 காலியிடங்கள், அதாவது தொடக்கநிலைப்ப ணியிடங்கள் காலியாக உள்ளன. அதைத் தொடர்ந்து தெற்கு மத்திய மண்டலத்தில் 17,022 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 

போராட்டம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரயில்வே துறை சார்பில் தொழில்நுட்பம் சாராத பிரிவில் 35,281 காலியிடங்களுக்குத் தேர்வு நடத்தியது. இதில் ஜூனியர் கிளார்க், ரயில் உதவியாளர், பாதுகாவலர், நேரக் கண்காணிப்பாளர், ரயில்நிலைய அதிகாரி ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவதாக இருந்தது. ஆனால், பிஹார், உ.பி., ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்வு எழுதும் இளைஞர்கள் நடத்திய திடீர் போராட்டத்தால் தேர்வு நடத்துவது ரத்து செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்

புல்லட் ரயில்

மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் தி்டம் குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதில் அளித்தார். அவர் கூறுகையில் “ மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்துக்கு தேவையான 89சதவீதநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டன. நிலத்தை கையகப்படுத்துவம் முறையால்தான் திட்டம் தாமதமாகிவருகிறது.

நிலம் கையகம்

குறிப்பாக மகராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. மேலும் ஒப்பந்தங்கள் இறுதி செய்தல், கொரோனா பரவல் ஆகியவற்றாலும் புல்லட் ரயில் திட்டம் தாமதமாகிவருகிறது.புல்லட் ரயில் திட்டத்தைத் தொடங்க இன்னும் 1,935 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 1,248 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டன.

தாமதம்

மகாராஷ்டிராவில் மட்டும் 298 ஹெக்டேர் நிலத்தில் இன்னும் 68 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படாமல் இருக்கிறது
குறிப்பாக பால்கர் மாவட்டத்தில் உள்ள 5 கிராமங்கள் புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து வருகின்றன. குறிப்பாக வார்குந்தி, கல்லாலே, மான், கானிவாடி, சாஹரே ஆகிய கிராமங்கள் எதிர்க்கின்றன. குஜராத்தில் 954 ஹெக்டேர் கையகப்படுத்தப்பட்டுள்ளன, இன்னும் 98 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது.

இந்த புல்லட் ரயில் திட்டத்தின் நன்மைகள் குறித்து நிலம் தராமறுக்கும் கிராமத்தினரிடம் அதிகாரிகள் சென்று பேசி வருகிறார்கள். தேவையான இழப்பீடும் தருவதற்கும் தயாராக இருக்கிறது, மறுவாழ்வுத் திட்டங்கள், வீடு, நிலம் தரவும் ரயில்வேதுறை தயாரா இருக்கிறது “ எனத் தெரிவித்தார்