raghuram rajan news: சிறுபான்மையினருக்கு எதிரான இந்தியாவின் தோற்றம்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை
raghuram rajan news :சிறுபான்மையினருக்கு எதிரான இந்தியாவின் தோற்றம், சர்வதேச சந்தையில் இந்தியப் பொருட்களுக்கும், நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியவை வெளிநாடுகள் நம்பகத்தன்மை இல்லாததாக கருதும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்தார்
சிறுபான்மையினருக்கு எதிரான இந்தியாவின் தோற்றம், சர்வதேச சந்தையில் இந்தியப் பொருட்களுக்கும், நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியவை வெளிநாடுகள் நம்பகத்தன்மை இல்லாததாக கருதும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்தார்
தாக்குதல்கள்
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினை, ராமநவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் சிறுபான்மையினருடன் மோதல், டெல்லி ஜஹாங்கிர் புரியில் மசூதிக்கு நெருக்கமாக இருந்த ஆக்கிரமிப்புகளை டோசர் கண்டு அகற்றியது. அதன்பின் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நிறுத்தியது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதைக் குறிப்பிட்டு ரிசர்வ் வங்கியி்ன் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசியுள்ளார். டைம்ஸ் நெட்வர்க் சார்பில் நடந்த இந்திய பொருளாதார மாநாட்டில் ரகுராம் ராஜன் பங்கேற்று பேசியதாவது:
ஒரே மாதிரி நடத்தை
ஜனநாயகத்தில் அனைவரையும் அனைத்து குடிமக்களையும் ஒரே மாதிரியான மரியாதையுடன் நடத்தப்பட்டுவதாக நாம் பார்த்தால், நாம் ஏழை நாடாக இருந்தாலும் மற்ற நாடுகளின் நுகர்வோரால் நாம் கருணையுடன் பார்கப்படுவோம். சரியான விஷயங்களைச் செய்யும் இந்த நாட்டிலிருந்துநான் பொருட்களை வாங்குகிறேன் என்று நுகர்வோர் வாங்குவார்கள். நம்முடையசந்தையும் வளரும்
தோற்றம்
வலிமையான நிலை என்ற இடத்திலிருந்து கருத்துப்போரில் இந்தியா நுழைகிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை என்பது அவசியம், இல்லாவிட்டால் இந்தப் போரில் தோற்றுவிடுவோம். யாரைநாம் ஆதரிக்கிறோம் என்பதை நுகர்வோர் மட்டும் முடிவு செய்வதில்லை, ஆனால், சர்வதேச உறவுகளில் எவ்வாறு இருக்கிறோம் என்பதை அந்த கருத்துக்களும் தீர்மானிக்கின்றன. ஒரு நாடு நம்பகமான கூட்டாளியாக என்பது சிறுபான்மையினரை எவ்வாறு நடத்துகிறோம் என்பதை வைத்தும் தீர்மானிக்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான இந்தியாவின் தோற்றம், சர்வதேச சந்தையில் இந்தியப் பொருட்களுக்கும், நிறுவனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியவை வெளிநாடுகள் நம்பகத்தன்மை இல்லாததாக கருதும்
சீனா
இதேபோன்ற பிரச்சினையில்தான் சீனாவும் சிக்கியது. உய்குர் முஸ்லிம்களை நடத்திய விதம், திபெத் மக்களை நடத்தியவிதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு இன்று ஆதரவு பெருகியதற்கு காரணமே, ஜனநாயக உலகம் நம்பும் சித்தாந்தங்களை அவர் ஆதிரித்ததுதான்.
சேவைத்துறையில் ஏற்றுமதி இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கும், இதை இறுக்கமாகப் பிடிக்க வேண்டும். தனிமனித உரிமை குறித்த மேற்கத்திய நாுகள் குறித்த கருத்தில் நாம் விழிப்பாக இருப்பது அவசியம்.
தரவுகள் பாதுகாப்பு
தரவுகளைப் பாதுகாப்பதில் பின்னடைவு, தனிமனித உரிமைப் பாதுகாப்பு ஆகியவற்றில் தன்னிறைவு அடையாவிட்டால் வெற்றி பெறுவதுகடினம். அரசியலமைப்புஅங்கீகாரம் பெற்ற தேர்தல் ஆணையம், அமலாக்கப்பிரிவு, சிபிஐ ஆகியவை ஜனநாயகத்தின் குணநலன்களை அழிக்கின்றன
இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்