இந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு பண்டிகைகள் மற்றும் உள்ளூர் விழாக்கள் காரணமாக நாடு முழுவதும் சில நாட்களில் வங்கிகள் மூடப்படும்.

இந்த வாரத்தில் பல்வேறு பண்டிகைகள் மற்றும் உள்ளூர் விழாக்கள் காரணமாக நாடு முழுவதும் சில வங்கிகள் மூடப்பட்டன. வங்கிச் சேவைகள் தடைபடாமல் இருக்க முன்கூட்டியே திட்டமிடுவது மிகவும் அவசியம். மாநிலத்திற்கு மாநிலம் பண்டிகை நாட்கள் மாறுபடும் என்பதால், உங்களது உள்ளூர் கிளையுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துவது சிறந்தது.

வங்கிச் சேவைகளை பயன்படுத்துவதற்கு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுங்கள். ATM, Net Banking, UPI போன்ற டிஜிட்டல் வசதிகள் விடுமுறையிலும் தொடர்ந்து கிடைக்கும். ஆனால், கிளைச் சேவைகள் தேவையானால் இந்தப் பட்டியலை நினைவில் கொள்ளுங்கள்.

ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியல்

ஆகஸ்ட் 25 (திங்கட்கிழமை) – அசாம் மாநிலத்தின் குவஹாத்தியில் ஸ்ரீமந்த சங்கர்தேவா திருபவ திதி காரணமாக வங்கிகள் மூடப்படும்.

ஆகஸ்ட் 27 (புதன்கிழமை) – முக்கிய நகரங்களில் வங்கிகள் மூடப்படும்.

குஜராத் - அஹமதாபாத்

மகாராஷ்டிரா – மும்பை, பெலாப்பூர், நாக்பூர்

கர்நாடகா – பெங்களூரு

ஒடிசா – புவனேஸ்வர்

தமிழ்நாடு – சென்னை

தெலங்கானா – ஹைதராபாத்

கோவா – பனாஜி

ஆந்திரப் பிரதேசம் – விஜயவாடா

விநாயகர் சதுர்த்தி, விநாயக பூஜை, சம்வத்சரி (சதுர்த்தி பக்ஷ), வரசித்தி விநாயக விரதம் ஆகிய பண்டிகைகள் காரணமாக விடுமுறை.

ஆகஸ்ட் 28 (வியாழக்கிழமை) – புவனேஸ்வர் (ஒடிசா) மற்றும் பனாஜி (கோவா) ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்படும்.

ஆகஸ்ட் 31 (ஞாயிற்றுக்கிழமை) – நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும் (வாரந்திர விடுமுறை).