small savings interest rate: PPF, NSC உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதம் உயர்கிறது
நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டு நாளை தொடங்குகிறது. இதையடுத்து, சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதத்தை மத்திய அரசு உயர்த்த அதிகமான வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டு நாளை தொடங்குகிறது. இதையடுத்து, சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதத்தை மத்திய அரசு உயர்த்த அதிகமான வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதெல்லாம் மாறப்போகுது! ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும் மாற்றங்கள் என்ன?
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி வீதத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை மத்திய அரசு நிர்ணயித்து வருகிறது. அந்த வகையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் முடிந்துவிட்டன. ஜூலை 1ம் தேதி முதல் செப்டம்பர் வரையிலான 2வது காலாண்டு நாளை தொடங்குகிறது. ஆதலால், புதிய வட்டி வீதத்தை மத்திய அரசு அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பிபிஎப்(PPF) திட்டத்துக்கு 7.1 சதவீதமும், தேசிய சேமிப்புப் பத்திரத்துக்கு(NSC) 6.8சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. கடந்த 8 காலாண்டுகளாக இந்த வட்டிவீதம் மாற்றப்படாமல் இருந்து வருகிறது. அதாவது 2020-21ம் ஆண்டு முதல் காலாண்டு முதல் வட்டிவீதம் உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நாட்டில் பணவீக்கம் 7 சதவீதத்தைக் கடந்துள்ளது. இந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இதுவரை 90 புள்ளிகள் வட்டியை உயர்த்திவிட்டது. இதனால் வங்கிகளில் கடனுக்கான வட்டியும் உயர்ந்துவிட்டது, வாடிக்கையாளர்களின் சேமிப்புத் திட்டங்கள், வைப்பு நிதிக்கான வட்டியும் அதிகரித்துள்ளது.
ஜூலையில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை: பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி
இந்த சூழலில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 2-வது காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியை, அஞ்சலக சேமிப்புத்திட்டங்களுக்கான வட்டி ஆகியவற்றை மத்திய அரசு உயர்த்தும் என்று தெரிகிறது. இதன் மூலம் பணவீக்கஉயர்வை இழுத்தப்பிடித்து உயரவிடாமல் தடுக்கலாம்.
கேர் ரேட்டிங் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் ரஜனி சின்ஹா கூறுகையில் “ ஜூலை-செப்டம்பர் காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டிவீதம் உயர்த்தப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏற்கெனவே வங்கிகள் டெபாசிட்களுக்கான வட்டியை உயர்த்தத் தொடங்கிவிட்டன.
ஆதலால், மத்திய அரசு சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி உயர்வை ஜூன் 30 அல்லது ஜூலை 1ம் தேதியோ அறிவிக்கலாம். ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை 90 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. அடுத்ததாக 100 புள்ளிகள் வரை உயர்த்தவும் வாய்ப்புள்ளது.” எனத் தெரிவித்தார்.
ஐசிஆர்ஏ ரேட்டிங் அமைப்பின் தலைமைப் பொருளாதார வல்லுநர் அதிதி நய்யார் கூறுகையில் “ சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி உயர்வு 2-வது காலாண்டில் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். பல்வேறு பங்குப்பத்திரங்களுக்கு வட்டி அதிகரித்துள்ளதால், சிறு சேமிப்புக்கும் வட்டி அதிகரிக்கும். சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியை உயர்த்துவதன் மூலம் கூடுதலான பணம் வங்கி முறைக்குள் வரும் பணவீக்கம் குறையும்” எனத் தெரிவித்தார்
மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: பிடிஆர் அழைப்பை ஏற்றார் நிர்மலா சீதாராமன்
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் தபால்நிலைய சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு 4% வட்டியும், ஓர் ஆண்டு முதல் 3 ஆண்டு வரையிலான டெர்ம் டெபாசிட்களுக்கு 5.5% வட்டியும் வழங்கப்பட்டது.5 ஆண்டுகள் டெர்ம் டெபாசிட்களுக்கு 6.7%வட்டியும்,5 ஆண்டுகள் ரெக்கரிங் டெபாசிட்களுக்கு 5.8% வட்டியும் வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கு 7.45 % வட்டியும், மாதாந்திர வருமானக்கணக்கிறத் 6.6% வட்டியும், தேசிய சேமிப்புப்பத்திரத்துக்கு 6.8% வட்டியும், பிபிஎப்திட்டத்துக்கு 7.1% வட்டியும் வழங்கப்படுகிறது. கிசான் விகாஸ் பத்திர்துக்கு 6.9% வட்டியும், செல்வ மகள்சேமிப்புத் திட்டம் அதாவது சுகன்யா சம்ரிதி திட்டத்துக்கு 7.6%வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டிவீதம் உயர்த்தப்படலாம்.