Asianet News TamilAsianet News Tamil

5 ஆண்டுகளில் ரூ.4.49 லட்சம் வட்டி கிடைக்கும்.. இந்த அசத்தலான போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றி தெரியுமா?

தனி நபர்களுக்கு பயனளிக்கக்கூடிய பிரபலமான தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் ஒன்று தான் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் திட்டம். 

Post office Time Deposit Scheme Benefits in tamil you can get rs 4.49 lakhs interest for rs 10 lakh investment Rya
Author
First Published Mar 12, 2024, 2:07 PM IST

நடுத்தர மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை தபால் நிலையம் மூலம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தபால நிலைய சேமிப்பு திட்டங்களில் பலரும் பணத்தை சேமித்து பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் தனி நபர்களுக்கு பயனளிக்கக்கூடிய பிரபலமான தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் ஒன்று தான் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் (Post Office Time Deposit Account -POTD),), தேசிய சேமிப்பு டைம் டெபாசிட் திட்டம் என்றும் இந்த திட்டம் அழைக்கப்படுகிறது,

மத்திய நிதி அமைச்சகம் நிதியாண்டின் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் இத்திட்டத்தின் வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது. அதன்படி 1 ஜனவரி 2024 முதல் மார்ச் 31, 2024 வரை இந்த திட்டத்திற்கு 1 ஆண்டுக்கு 6.9%, 2 ஆண்டுகள் 7%
3 ஆண்டுகள் 7.1%, 5 ஆண்டுகள் 7.5% வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தபால் அலுவலக டைம் டெபாசிட் திட்டத்தின் அம்சங்கள்

தபால் அலுவலக டைம் வைப்புத் திட்டத்தின் கீழ் 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.1000 முதல் முதலீடு. அதிக பட்ச முதலீட்டிற்கு வரம்பு இல்லை. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு உறுதியான வருமானத்தை உறுதியளிக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொன்றுக்கு எளிதாக மாற்றலாம். தனியாகவோ அல்லது கூட்டாகவோ இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தை முதிர்வு காலத்தை நீட்டிக்க முடியும். முதிர்ந்த கணக்கின் வருமானம் திரும்பப் பெறப்படாவிட்டால், முதிர்வு தேதியில் பொருந்தக்கூடிய வட்டி விகிதங்களில் அசல் வைப்புத் காலத்திற்கு கணக்கு தானாகவே புதுப்பிக்கப்படும். மேலும் இந்த கணக்கை தொடங்கி 6 மாதத்திற்கு பிறகு முதிர்வு காலம் முடியும் முன்பே இந்த திட்டத்தில் இருந்து வெளியேறும் வாய்ப்புள்ளது. 

மத்திய அரசு சமீபத்தில் அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் ICICI வங்கி, ஆக்சிஸ் வங்கி, HDFC வங்கி போன்ற சில தனியார் வங்கிகளுக்கும் முதலீட்டாளர்கள் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்குகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.  இந்தியர்கள் அனைவரும் இந்தக் கணக்கைத் தனியாகவோ கூட்டாகவோ திறந்து இயக்கலாம் ஒரு மைனர் சார்பாக ஒரு பெற்றோர்/பாதுகாவலர் தபால் அலுவலக நேர வைப்பு கணக்கைத் திறக்கலாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் அலுவலக இந்த கணக்கைத் திறக்க முடியாது

புதிய போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபாசிட் கணக்கைத் தொடங்க உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண்ணை வழங்குவது கட்டாயம். ஒருவேளை உங்களுகு ஆதார் எண் இல்லை எனில் கணக்கைத் திறக்கும் போது ஆதார் பதிவுக்கான விண்ணப்பம் அல்லது பதிவு ஐடிக்கான ஆதாரத்தை நீங்கள் வழங்க வேண்டும் மற்றும் கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் கணக்கு அலுவலகத்தில் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.

ரூ. 10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்?

இந்த போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் ரூ. 10 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்று தற்போது பார்க்கலாம். ஓராண்டு காலத்தில் இந்த திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் 6.9% என்ற வட்டி விகிதத்தில் ரூ.70,806 வட்டியாக கிடைக்கும். அதன்படி ஓராண்டின் முடிவில் உங்களுக்கு ரூ.10,70,806 கிடைக்கும். அதுவே 2 ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்தால் 7% வட்டி கிடைக்கும். அதன்படி நீங்கள் 10 லட்சம் முதலீடு செய்தால் 2 ஆண்டுகளின் முடிவில் உங்களுக்கு ரூ.1,48,882 வட்டி கிடைக்கும். அதுவே 3 ஆண்டுகளுக்கு 7.1% வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்கு ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் வட்டி மட்டுமே ரூ.2,35,075 கிடைக்கும். அதிகபட்சமாக 5 ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ.4,49,948 வட்டி கிடைக்கும். அதன்படி மொத்தம் 5 ஆண்டுகளின் முடிவில் ரூ.14,49,948 உங்களுக்கு கிடைக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios