Asianet News TamilAsianet News Tamil

சில ஆண்டுகளிலேயே ரூ.68 லட்சம் பணம் கிடைக்கும்.. அரசின் இந்த அசத்தல் திட்டம் பற்றி தெரியுமா?

உத்தரவாத வருமானத்துடன் கூடிய பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்தால் சில ஆண்டுகளில் ரூ.66.58 லட்சத்தை பெற முடியும்.

Post Office Scheme 2024: PPF scheme with guaranteed returns can help you get Rs 66.58 lakh in few years Rya
Author
First Published Jan 8, 2024, 4:56 PM IST

மத்திய அரசு தபால் நிலையம் மூலம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உத்தரவாத வருமானம் மற்றும், பாதுகாப்பான முதலீடு தேவை என்று நினைபப்வர்களுக்கு தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் உதவியாக இருக்கும். அந்த வகையில் தபால் நிலையத்தில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF) குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம். 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடியுரிமை பெற்ற எவரும் தபால் நிலையத்தில் PPF கணக்கை திறக்கலாம். தங்கள் பிள்ளைகள் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவல் இந்த கணக்கதை திறக்கலாம். 

பல சேமிப்பு திட்டங்கள் மற்றும் வங்கி நிலையான வைப்பு திட்டங்களை விட ஒப்பீட்டளவில் PPF திட்டத்தின் வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. அதன்படி 2023-24 நிதியாண்டின் Q4க்கு தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சேமிப்புத் திட்டமாக இருப்பதால், முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பான முதலீடுகளை அனுபவிக்க முடியும். 

மூத்த குடிமக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. அதிக வட்டியை வாரி வழங்கும் 8 வங்கிகள் - என்னென்ன தெரியுமா?

ஒரு நிதியாண்டில் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 500, அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். PPF கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். எவ்வாறாயினும், அசல் முதிர்வு தேதியை அடைந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய பங்களிப்புகளுடன் அல்லது இல்லாமல் நீங்கள் அதை நீட்டிக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் முன்கூட்டிய திரும்பப் பெறும் வசதியும் உள்ளது. ஆனால் 5 ஆண்டுகள் தொடர்ச்சியான முதலீட்டை முடித்த பின்னரே முதலீட்டாளர்கள் 3வது நிதியாண்டிலிருந்து கடன் வசதியையும் பெறலாம்.

ரூ.68 லட்சம் எப்படி கிடைக்கும்?

இந்த PPF திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரூ1.5 லட்சம் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.22.50,000 முதலீடு இருக்கும். 7.1% வட்டியை சேர்த்தால் மொத்த பணம் ரூ.40,68,209 ஆக இருக்கும். 

உங்கள் முதலீட்டை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டித்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதே முதலீட்டைத் தொடர்ந்தால், 20 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ.30,00,000 ஆக இருக்கும். 7.1 சதவீத வட்டி விகிதத்தில், நீங்கள் ரூ. 36,58,288 வட்டியாகவும், முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ.66,58,288 பணத்தையும் பெறலாம். இந்தத் தொகையைக் கொண்டு குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணம், வீட்டுத் தேவைகளை எளிதாக நிறைவேற்றலாம். நீங்கள் 25 வயதில் கூட PPF இல் முதலீடு செய்யத் தொடங்கினால், 15 ஆண்டுகளில் நல்ல அளவிலான பணத்தை சேமிக்க முடியும்.

PPF நீட்டிப்பு விதிகள்

இந்தியாவில் வசிக்கும் குடிமக்கள் மட்டுமே PPF திட்டத்தை நீட்டிக்க முடியும். வேறு எந்த நாட்டின் குடியுரிமை பெற்ற இந்திய குடிமக்கள் PPF கணக்கை திறக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் அல்லது ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால், அதை நீட்டிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். PPF நீட்டிப்புக்கு, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்திற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

“விடுகதையா இந்த வாழ்க்கை” ரூ.40,000 கோடி சொத்துக்களை உதறி தள்ளிவிட்டு துறவியாக மாறிய தமிழர்.. யார் அவர்?

முதிர்வு தேதியிலிருந்து 1 வருடம் முடிவதற்குள் இந்த விண்ணப்பத்தை நீங்கள் கொடுக்க வேண்டும். உங்கள் விண்ணப்பத்தில் PPF கணக்கின் காலம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டால், நீங்கள் ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகையை நீங்கள் டெபாசிட் செய்யவில்லை என்றால், உங்கள் கணக்கு மூடப்படும். அதை மறுதொடக்கம் செய்ய, நீங்கள் ஆண்டுக்கு 50 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios