petrol diesel VAT : போலித்தனம் செய்யும் எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள்  வெளிநாட்டு மதுவுக்கு வரியைக் குறைப்பதற்குப் பதிலாக  பெட்ரோலுக்கு வரிக் குறைத்தால் அதைவிட விலை குறைவாக இருக்கும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் பூரி பதிலடி கொடுத்துள்ளார்.

போலித்தனம் செய்யும் எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் வெளிநாட்டு மதுவுக்கு வரியைக் குறைப்பதற்குப் பதிலாக பெட்ரோலுக்கு வரிக் குறைத்தலா் அதைவிட விலை குறைவாக இருக்கும் என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் பூரி பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமர் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன், மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில், “ பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்துவிட்டது. ஆனால், சில மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்காமல் மக்களை சிரமப்படுத்துகின்றன.குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மே.வங்கம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்டமாநிலங்கள் மத்திய அரசின் அறிவுரையைக் கேட்பதில்லை. வரியையும் குறைக்கவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளும் நேற்று பதிலடி கொடுத்ததால் கடும் வார்த்தைப் போர் உருவானது.

விமானக் கட்டணம்

எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி நேற்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: 

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பெட்ரோல், டீசலுக்கு வரி குறைவாக இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் விமான எரிபொருளுக்கு அதிகமான வரி விதிப்பதால்தான் விமானக் கட்டணமும் எகிறியுள்ளது.

வரி குறைவு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோலுக்கு வாட் வரி லிட்டருக்கு ரூ.14.50, டீசலுக்கு ரூ.17.50 வசூலிக்கப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும்மாநிலங்களில் பெட்ரோலுக்கு ரூ.26, டீசலுக்கு ரூ.32 நிர்ணயிக்கப்படுகிறது. இதிலிருந்து வேறுபாட்டைத் தெரிந்து கொள்ளலாம். அவர்களின் நோக்கம் எதிர்ப்பது, விமர்சிப்பது, மக்களுக்கு நிம்மதியைத் தந்துவிடக்கூடாது.

எதிர்க்கட்சி மாநிலங்கள்

விமான டிக்கெட் விலை ஏன் குறையவில்லை என்று யோசித்தோம், விமான இயக்கத்தில் டிக்கெட்விலையில் 40 சதவீதம் எரிபொருள் விலை வந்துவிடுகிறது. மே.வங்கம், மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்கள் 25 வாட் வரியை ஏடிஎப் எரிபொருள் மீதுவிதிக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களான உ.பி. நாகாலாந்து, ஜம்மு காஷ்மீரில் ஒரு சதவீதம்தான் வரி இருக்கிறது

சமானிய மக்கள் எளிதாக விமானப் பயணம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார், ஆனால், இந்த மாநிலங்கள் அதற்கு தடைகளை உருவாக்குகிறார்கள். மகாரஷ்டிரா அரசு கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ரூ.79,412 கோடி பெட்ரோல், டீசலுக்கு வரி வசூலித்துள்ளது, இந்த ஆண்டு ரூ.3ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். ஏன் வாட் வரியைக் குறைத்து மக்களுக்கு சற்று நிம்மதியளிக்க மறுக்கிறார்கள்

மதுவைவிட பெட்ரோல் விலை குறையும்

எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் மதுவுக்கு வரியைக் குறைப்பதற்குப் பதிலாக பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியைக் குறைத்தால், பெட்ரோல் விலை குறைவாக இருக்கும். 

மகாராஷ்டிரா அரசு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.32.15 வரிவிதிக்கிறது, ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு ரூ.29.10 வரிவிதிக்கிறது. உத்தரகாண்டில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.14.51 வரியும், உ.பி. ரூ.16.50 வரியும் விதிக்கிறது. உண்மைக்கு எதிர்ப்புகள் சவால்விட முடியாது.

தெலங்கானா அரசு பெட்ரோல் மீது வாட் வரியாக லிட்டருக்கு 32.20%, டீசலுக்கு 27% வரிவிதிக்கிறது. கடந்த 2014 முதல் 2021ம் ஆண்டுவரை ரூ.56,020 கோடி வரியாக வசூலித்துள்ளது. 2021-22ம்ஆண்டில் வரிவசூல் ரூ.13,315 கோடியாக உயரும், எதிர்பார்க்கிறோம். ஒட்டுமொத்தமாக ரூ.69,334 கோடி எங்கே சென்றது.

இவ்வாறு ஹர்திப் பூரி தெரிவித்தார்