இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு 5.37% அதிகரித்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உணவுப் பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.
எல்லா பொருட்களின் விலை உயர்வுக்கும் அடிப்படை காரணமே பெட்ரோல், டீசல் விலைதான். கச்சா எண்ணெய் விலை ஏற்றம், அதனை தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலை உடனடிய பாதிப்பை ஏற்படுத்தும். கச்சா எண்ணெய் உற்பத்தியை அடிப்படையாக கொண்டே சர்வதேச நாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது என கூறப்படும் நிலையில், இந்தியாவில் அதன் தாக்கம் அதிகரிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் பெட்ரோலியம் மற்றும் இதனுடன் தொடர்புடைய எரிபொருட்களின் பயன்பாடு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு, இந்தியாவின் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியம் உற்பத்தி பொருட்களின் மொத்த பயன்பாடு 5.37% உயர்வு காணும் என அரசு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி பாதையை பிரதிபலிப்பதோடு, பல்வேறு பொருளாதாரத் துறைகளிலும் நேரடி தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் உணவுப் பொருட்கள் உட்பட அனைத்து வாழ்வாதாரச் செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பெட்ரோலிய பொருட்கள் தேவையின் காரணங்கள்
இந்தியாவில் பொது மற்றும் தனியார் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலைகளின் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. கார்கள், பைக்குகள், லாரிகள், பேருந்து போன்ற வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் எரிபொருள் தேவை உயர்ந்து வருகிறது. அதேபோல் தொழில்துறை வளர்ச்சியும் இந்தியாவில் உயர்ந்து வருகிறது. தொழிற்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள், கட்டுமானத் துறை ஆகியவைகளுக்கு அதிக எரிபொருள் தேவைபடுகின்றன. மேலும் Tier-2 மற்றும் Tier-3 நகரங்களில் கூட வாகன பயன்பாடு வேகமாக வளர்ந்து வருகிறது. இதுவும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு
இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் பயன்பாடு 5 புள்ளி 3 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால், பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால் வரும் மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹2 முதல் ₹4 வரை உயர வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ₹3 முதல் ₹5 வரை உயர வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அண்மையில் சர்வதேச மார்க்கெட்டிலும் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதன் தாக்கமும் சேர்ந்து, விலை நிலையை கட்டுப்படுத்த அரசு முயன்றாலும், இது பொதுவாக நுகர்வோருக்கு கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும்.
உணவுப் பொருட்களில் ஏற்படும் தாக்கம்
டீசல் விலை உயர்வு காரணமாக உரம் மற்றும் விவசாய இயந்திரங்களின் விலை அதிகரிக்கும். மேலும் லாரி போக்குவரத்து செலவு அதிகரிப்பு என்பதால் சந்தைக்கு வரும் உணவுப் பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. விவசாயம் நடைபெறும் ஊர்களிலிருந்து நகரங்களுக்கு உணவுப் பொருட்கள் கொண்டு வரப்படும் போது டீசல் விலை உயர்வால் லாரி வாடகை கூடும். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள், டிரெயினர்கள், நீர்ப்பாசனம் ஆகியவை டீசலில் இயங்கும். விலை உயர்வால் பயிர் சாகுபடிக்கு கூடுதல் செலவு ஏற்படும். பழங்கள், காய்கறிகள் போன்றவை குளிர்சாதன காடுகளிலிருந்து பெரிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும். குளிர்சாதன வாகனங்களும் டீசலில் இயங்குவதால், விலை உயர்வாகும். இதனால், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், பால், மீன், இறைச்சி உள்ளிட்ட அனைத்து முக்கிய உணவுப் பொருட்களின் விலை 5% முதல் 12% வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்தியாவின் பெட்ரோலியம் பயன்பாட்டில் 5.37% உயர்வு என்பது வளர்ச்சியின் நெறியில் நாட்டின் முன்னேற்றத்தை காட்டும் ஒரு அடையாளம் என்றாலும், அதனால் ஏற்படும் விலை உயர்வுகள் மக்கள் வாழ்க்கையில் சவால்களை உருவாக்கக்கூடும். எரிபொருள் விலை உயர்வும் அதன் தொடர்ச்சியாக உணவுப் பொருட்களில் ஏற்படும் விலை உயர்வும், வருமானம் குறைந்த மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இதை சமாளிக்க அரசு உடனடி நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேசமயம், பொதுமக்களும் தங்களது செலவுகளை பரிமாற்றமாக திட்டமிட்டு வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்களை மேற்கொள்வது அவசியம்.
