கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 72.91 காசுகளாகவும், டீசல் விலை ரூபாய் 67.67 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

நேற்றைய விலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பெட்ரோல் விலையில் 20 காசுகள் குறைந்தும், டீசல் விலையில் 20 காசுகள் குறைந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த சில நாட்களாகவே தொடர் இறங்குமுகம் காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் இதற்கிடையில் சென்ற வாரம் தொடர்ந்து 2 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.