பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 15 ஆண்டுகளாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை, மாதத்திற்கு இரண்டு முறை அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து வந்தது. 

பின்னர் இந்த முறையில் மாற்றம் செய்து, நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. பின்னர் ஒவ்வொரு நாளும் ஏறுமுகத்தில் இருந்து வந்த பெட்ரோலின் விலை, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சற்று குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் மீண்டும், ஏறுமுகத்தில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து உள்ளனர். அதன்படி, இன்றைய நிலவரப்படி, நேற்றோடு ஒப்பிடும் போது, 13 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ. 81.22 கும், டீசல் விலையில் 15 காசுகள் உயர்ந்து ரூ.73.69 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.