MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Govt Training: நகை கடனை இனி நீங்கதான் கொடுக்க போறீங்க.! 5 நாட்களில் நகை மதிப்பீட்டாளராக சிறந்த வாய்ப்பு.!

Govt Training: நகை கடனை இனி நீங்கதான் கொடுக்க போறீங்க.! 5 நாட்களில் நகை மதிப்பீட்டாளராக சிறந்த வாய்ப்பு.!

தமிழக அரசு நடத்தும் ஐந்து நாள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வேலை வாய்ப்பை வழங்குகிறது. தங்கத்தின் தரம் அறிதல், விலை நிர்ணயம், போலி நகைகளை கண்டறிதல் போன்றவை கற்றுதரப்படும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Dec 12 2025, 09:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
Image Credit : Asianet News

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தமிழக அரசு நடத்தும் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தற்போது வேலை வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் டாப் கோர்ஸ்களில் ஒன்றாக மாறியுள்ளது. நகை தரத்தை மதிப்பிடுவதில் இருந்து விலை கணக்கீடு வரை எல்லா முக்கிய விஷயங்களையும் கற்றுத்தருவதால், இந்தப் பயிற்சியை முடித்தவர்கள் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நகை மதிப்பீட்டாளர் பணியைப் பெறும் வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

23
ஐந்து நாள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
Image Credit : Asianet News

ஐந்து நாள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDITN) சார்பில் டிசம்பர் 15 முதல் 19 வரை ஐந்து நாள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடைபெற உள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்; 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண், திருநங்கை, திருநம்பிகள் என அனைவரும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சி, முழுமையான நடைமுறை அனுபவத்துடன் கற்றுத்தரப்படும் என்பதால், இந்தக் கோர்ஸின் பயன் உடனே வேலை வாய்ப்பாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Related image1
Business சீக்ரெட்: லட்சம் ரூபாய் சம்பாதிக்க சில ஆயிரங்கள் முதலீடு செய்தாலே போதும்.! எப்படி தெரியுமா?!
Related image2
Business Loan: ஸ்டார்ட்-அப்பா? தொழில் கனவா? கடன் பெற ஷார்ட் கட் இதுதான்!
33
இதையெல்லாம் கத்துக்கலாம்
Image Credit : Asianet News

இதையெல்லாம் கத்துக்கலாம்

பயிற்சியில் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் தரத்தை அறிதல், காரட் மதிப்பீடு, ஆசிட் சோதனை, விலை நிர்ணயிக்கும் முறை, ஹால்மார்க் முத்திரை அடையாளம் காணுதல், போலி நகைகளை கண்டறிதல் போன்ற முக்கியமான விஷயங்கள் கற்றுத்தரப்படும். கூடுதலாக ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை, தங்க நகைகளின் வகைகள், சந்தை விலை அடிப்படையில் நகை மதிப்பு நிர்ணயம் செய்வது போன்றவை அனைத்தும் விரிவாக பயிற்சியில் அடங்கும்.

இந்தப் பயிற்சியின் மிகப்பெரிய பலன்களில் ஒன்று – பயிற்சி முடிந்தவுடன் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்பதாகும். இந்தச் சான்றிதழ் பல வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கும், தனியார் நிதி நிறுவனங்களிலும் நேரடி வேலை வாய்ப்புக்கும் உதவும். இதனுடன் மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் கடன் உதவி திட்டங்கள், மானிய திட்டங்கள் பற்றிய ஆலோசனைகளும் பயிற்சியில் வழங்கப்படும். குறைந்த வாடகையில் தங்குமிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், மாவட்டங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கும் இது ஒரு பெரிய சாதகமான வாய்ப்பாக உள்ளது.

பயிற்சி தொடர்பான மேலும் விவரங்களுக்காக editn.tn இணையதளம் வழியாக முன்பதிவு செய்யலாம். அல்லது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9360221280, 9840114680 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதுவரை இந்தப் பயிற்சியை முடித்த பலர் நாட்டின் முன்னணி வங்கிகளில் பணியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி நடைபெறும் முகவரி

 தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600 032.

உங்கள் கையில் நகையின் மதிப்பை நிமிடங்களில் கணக்கிடும் திறன்! பயிற்சி முடிந்ததும் வங்கி வேலை கிடைக்கும் வாய்ப்பு! அதனால்தான்—நகைக்கடன் மதிப்பீட்டாளர் ஆகறது இனி உங்க கையில்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
தங்கம்
தங்க நகை கடன்
ஏசியாநெட் நியூஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
iPhone-க்கே டஃப் கொடுக்குமா? பட்ஜெட் விலையில் 3x ஜூம் மற்றும் AI வசதிகளுடன் களமிறங்கிய Tecno-வின் புது வரவு!
Recommended image2
ஒரே ஒரு கேள்வியால் தகுதி இழந்தீர்களா? UGC NET முடிவுகளில் மாற்றம் வருமா? - முழு விவரம்!
Recommended image3
ITI மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்! 150 மணிநேர கட்டாய வேலைப்பயிற்சி - DGT அதிரடி உத்தரவு!
Related Stories
Recommended image1
Business சீக்ரெட்: லட்சம் ரூபாய் சம்பாதிக்க சில ஆயிரங்கள் முதலீடு செய்தாலே போதும்.! எப்படி தெரியுமா?!
Recommended image2
Business Loan: ஸ்டார்ட்-அப்பா? தொழில் கனவா? கடன் பெற ஷார்ட் கட் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved