petrol and diesel cost today high

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தது. இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் வரை நடத்தையில் இருந்தது

அதன் பின்னர் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.இதனை தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டது. அதனிடையே சில சமயத்தில் மட்டும் சற்று குறைந்து காணப்பட்டது .

பெட்ரோல் டீசல் என்பது அத்தியாவசிய பொருள் என்பதால்,பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்

இந்த சூழலில் பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 12 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ. 72.35 ஆக உள்ளது. டீசல் விலையில் நேற்றைவிட 11 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.61.36 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது