பெட்ரோல் மற்றும்  டீசல் விலையில் தொடர் சரிவு..! 

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்த வண்ணமே உள்ளது. இதற்கு முன்னதாக சென்ற மாதம் மாதத்தின் முதல் வாரத்திலேயே பெட்ரோல் விலை சற்று அதிகமாக காணப்பட்டது. அதற்கு முன்பாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 80 தாண்டியது. டீசல் விலையும் ரூ.70 தாண்டி இருந்தது.

இதனை அடுத்து மக்கள் பெரும் அதிருப்திஅடைந்தனர். நாடு முழுக்க மக்கள் விலை உயர்வுக்கு எதிராக, குரல் கொடுக்க தொடங்கினர்.பின்னர் படிப்படியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய தொடங்கியது. முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதத்திற்கு இரண்டு முறை மாற்றி அமைக்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்றைய விலையோடு ஒப்பிட்டு பார்க்கும் போது சென்னையில் இன்று, பெட்ரோல் விலை 21 காசுகள் குறைந்து லிட்டர் ரூ 71.01-க்கும்,  டீசல் விலை 23 காசுகள் குறைந்து லிட்டர் ரூ 65.91-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதால் மக்கள் சற்று நிம்மதி மூச்சு விட்டுள்ளனர்.