பெட்ரோல் டீசல் விலை மீண்டும்  குறைவு..! 

இன்றைய  பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மீண்டும் குறைவு ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து, அதிகரித்த வண்ணமே இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ 72.41-க்கும், டீசல் விலை மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.67.38க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் அடுத்து வரும் சில நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மீண்டும் குறைவு ஏற்படும் என தகவல் தெரிவிக்கின்றன.