Pepsi sale in tamilnadu turned to new name as Gethu
“ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, மார்ச் 1ஆம் தேதி முதல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை தமிழகம் முழுவதும் உள்ள மளிகை கடைகளில் விற்கக்கூடாது என்று வணிகர்கள் சங்கம் முடிவு செய்திருந்ததையடுத்து.
தமிழகம் முழுவதும், வெளிநாட்டு குளிர்பானங்கள் எதிர்ப்புக்கும் பொதுமக்களிடம் ஆதரவு பெருகியது. இதனால் வணிகர் சங்கங்களும் மார்ச் 1ஆதேதி முதல் வெளிநாட்டு குளிர்பானங்களை கடைகளில் விற்பனை செய்யப்போவதில்லை என்று அறிவித்தன.
பின்னர் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்கள் விற்பதில் பெரும்பாலான கடைகள் பின் வாங்கின. அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் பன்னாட்டு நிருவனங்களின் குளிர்பானங்கள் விற்பனைக்கு வர வில்லை .
இந்நிலையில், இதற்கு மாற்றாக பழமை வாய்ந்த உள்நாட்டு நிறுவனமானா காலி மாக் நிறுவனத்தின் தயாரிப்பான பவண்டோ குளிர்பானத்தின் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்தது .
இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் விற்பனையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பெப்சி நிறுவனம், “கெத்து“ என்ற தமிழ் பெயரில், விற்பனையை தொடங்கியுள்ளது பெப்சி.
ஆக மொத்தத்தில் பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என நினைத்தாம். அது போன்று, பன்னாட்டு குளிர்பானங்களின் விற்பனை தமிழகத்தில் தடை செய்யப் பட்டது என்று நினைத்தால் அது நம்முடைய முட்டாள் தனம் என்பதை மக்கள் புரிந்துக் கொள்ளும் விதமாக , தமிழில் ''கெத்து'' என்ற பெயரில், குளிர்பானங்களை விற்பனை செய்து வருகிறது பெப்சி.
