Asianet News TamilAsianet News Tamil

பெப்பர்ப்ரை இணை நிறுவனர் அம்பரீஷ் மூர்த்தி மாரடைப்பால் காலமானார்

பெப்பர்ஃப்ரை இணை நிறுவனர் அம்பரீஷ் மூர்த்தி மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஆன்லைன் பர்னிச்சர் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான ஆஷிஷ் ஷா தெரிவித்துள்ளார்.

Pepperfry co-founder Ambareesh Murty dies of cardiac arrest
Author
First Published Aug 8, 2023, 11:16 AM IST

பெப்பர்ஃப்ரை இணை நிறுவனர் அம்பரீஷ் மூர்த்தி மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஆன்லைன் பர்னிச்சர் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான ஆஷிஷ் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "எனது நண்பர், வழிகாட்டி, சகோதரர், ஆத்ம தோழன் அம்பரீஷ் மூர்த்தி இப்போது இல்லை என்பதைத்  மிகவும் துயரத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். நேற்று இரவு லேயில் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அவருக்காகவும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்குமானவர்களின் வலிமைக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று ஆஷிஷ் ஷா குறிப்பிட்டுள்ளார்.

51 வயதான அம்பரீஷ் மூர்த்தி 2011ஆம் ஆண்டு ஆஷிஷ் ஷாவுடன் இணைந்து பெப்பர்ஃப்ரை நிறுவனத்தைத் தொடங்கினார்.

நிலவுக்கு 100 கி.மீ. தொலைவில் சந்திரயான்-3... இஸ்ரோவுக்கு இனிதான் பெரிய சவால் காத்திருக்கு!

ஜூன் 1996 இல், புகழ்பெற்ற சாக்லேட் உற்பத்தி நிறுவனமான கேட்பரியில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணராக சேர்ந்தபோது, மூர்த்தியின் மூர்த்தியின் பயணம் தொடங்கியது. அந்நிறுவனத்தில் அவர் ஐந்தரை ஆண்டுகள் பணிபுரிந்தார். பின் மூர்த்தி தற்போதைய ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் நிறுவனத்தில் நிதித்துறையில் இணைந்தார். அங்கு மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இருந்தார்.

இந்த நேரத்தில் அவர் தனது சொந்த முயற்சியான ஆரிஜின் ரிசோர்சஸைத் தொடங்கினார். இந்த போர்டல், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அவர் 2005 இல் இந்த ஸ்டார்ட்-அப்பை நிறுத்திவிட்டு, பிரிட்டானியாவில் மார்க்கெட்டிங் மேலாளராக சேர்ந்தார்.

பெப்பர்ஃப்ரை

ஏழு மாதங்களுக்குப் பிறகு, மூர்த்தி ஈபே இந்தியா நிறுவனத்தில் இணைந்தார். இந்நிறுவனத்தின் பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் இந்தியாவுக்கான மேலாளராக இருந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 2011 இல் மூர்த்தி ஆஷிஷ் ஷாவுடன் இணைந்து பெப்பர்ஃப்ரை (Pepperfry) நிறுவனத்தைத் தொடங்கினார்.

வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கான ஆன்லைன் வணிக நிறுவனமாக பெப்பர்ஃப்ரை (Pepperfry) தொடங்கப்பட்டது. ஸ்டார்ட்அப் ஹோம் சென்டர், அர்பன் லேடர், ஃபர்லென்கோ, வேக்ஃபிட் போன்ற நிறுவனங்களுக்கு பலத்த போட்டியாக பெப்பர்ஃப்ரை இருந்தவருகிறது.

இப்படி பார்த்ததே இல்ல... அதிசயித்து போன விஞ்ஞானிகள்! உடைந்த உலோகம் தானாகச் சேர்ந்த அதிசயம் நடந்தது எப்படி?

Follow Us:
Download App:
  • android
  • ios