வீட்டு மனை வாங்கி உள்ளீர்களா..? உஷார்..! 

வாழ்க்கை முழுதும் உழைத்த பணத்தை கொண்டு, தனது சந்ததியினர் வருங்காலத்தில் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக குருவி சேர்ப்பது போல சிறுக சிறுக சேர்த்து வைத்து மனை வாங்கி வைப்பார்கள்.

அதிலும் சென்னை சுற்று வட்டாரத்தில் வாங்க மக்களுக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. காரணம் அதிகரித்து வரும் மக்கள் தொகை..நாளுக்கு நாள் சென்னை வந்து குடியேறும் மக்கள்... 

சில ஆண்டுகள் கழித்து வெட்டு மனைகளை விற்றால் கூட நல்ல லாபம் கிடைக்கும் என ரியல் எஸ்டேட்  துறையில் முதலீடு செய்கின்றனர். ஆனால் அவ்வாறு வாங்கும் நிலம் பாதுகாப்பானதாக உள்ளதா என்பதையும் எப்படி அறிவீர்கள்?

நீங்கள் செய்ய வேபண்டியது எல்லாம்... குறைந்தபட்சம் ஆறு மதத்திற்கு ஒரு முறையாவது, வில்லங்கம் போட்டு பார்ப்பது நல்லது. அவ்வாறு வில்லங்க சான்றிதழ் படி கடைசியாக உங்கள் பெயரில் பதிவு இருந்தால் சரி.. இல்லை என்றால் ஏதோ தவறு நடந்து உள்ளது என்பது தான் அர்த்தம்.

அதுமட்டுமா...? இப்போதெல்லாம் நீண்ட நாட்களாக வீட்டு மனை வாங்கி விட்டு, அருகில் சென்று கூட பார்க்காமல் எங்கோ ஒரு மூலையில் வேலை செய்து வருவார்கள் அல்லவா  நம் மக்கள்.. இது போன்றவர்களின் வீட்டு மனைகளை குறி வைத்து, போலி பாத்திரத்தை தயார் செய்து அதனை வேறு ஒருவர் பெயரில் பவர் வாங்கி, ஏமார்ந்தவர்களிடம் விற்க முன் பணமாக தேவைப்படும் போதெல்லாம் பணத்தை வாங்கிக்கொண்டு கடைசியில் பத்திரப்பதிவு நேரத்தில் அவர்கள் செய்த கோல்மால் வெளிவரும்...இது பெரிய சட்ட சிக்கலை ஏற்படுத்தி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வீட்டு மனை பாதுகாப்பாக உள்ளதா என அடிக்கடி செக் செய்துக்கொள்வது நல்லது. 

அதையும் தாண்டி, வெளி நாட்டிலோ அல்லது வெளி ஊரிலோ வேளையில் இருப்பவர்கள், அடிக்கடி வர இயலாமல் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், உங்கள் வீட்டு மனை பத்திரத்தை  அடமானம் வைத்தது போல, அதாவது நெருங்கியவர்களிடம் அடமானம் வைத்தது போல காண்பித்து ஒரு அக்ரீமெண்ட் போட்டு பதிவு செய்து  இருந்தால்...மற்ற திருட்டு கும்பலிடம் இருந்து இடத்தை காப்பாற்றிக் கொள்ளலாம்.

எனவே உங்கள் இடத்தின் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்து வைத்துக்கொள்வது நல்லது.

சென்னையை பொறுத்தவரை ...

மெட்ரோ வர உள்ள ஊர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளதால், அந்த  பகுதிகளில் உள்ள வீட்டு மனைகளின் விலை அதிரடியாக உயரும்  என்பதால், அங்குள்ள வீட்டு மனைகள் குறி வைத்து அலைந்து வருகிறதாம் ஒரு கும்பல். இது போன்ற ஆக்கிரமிப்பு, சென்னை திருவொற்றியூர் பகுதியில் சமீபத்தில் நடந்து, நீதிமன்றத்தால் வழக்கு கூட உள்ளது. இது போன்று பல இடங்களில் நடந்து வருவதாகவும் திக் திக் தகவல் வெளியாகி உள்ளது.