Asianet News TamilAsianet News Tamil

என்ன விட்ருங்க... ஆர்பிஐ அதிரடியால் ராஜினாமா செய்து எஸ்கேப் ஆகும் பேடிஎம் இயக்குநர் மஞ்சு அகர்வால்!

ரிசர்வ் வங்கி (RBI) பேடிஎம் வங்கி செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவிட்ட நிலையில், பேடிஎம் வங்கிப் பிரிவின் இயக்குநர் மஞ்சு அகர்வால் பதவி விலகி இருப்பது மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.

Paytm Director Manju Agarwal Resigns Amid RBI Clampdown On Payments Bank  sgb
Author
First Published Feb 12, 2024, 3:10 PM IST

பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் வங்கிப் பிரிவில் இயக்குநராக இருந்த மஞ்சு அகர்வால் ரிசர்வ் வங்கி நடவடிக்கையின் எதிரொலியாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிப்ரவரி 1ஆம் தேதி மஞ்சு அகர்வால் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் குழுவில் இருந்து தனது தனிப்பட்ட பொறுப்புகள் காரணமாக ராஜினாமா செய்தார் என பேடிஎம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் பெரும்பாலான செயல்பாடுகளை நிறுத்துமாறு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஆர்பிஐ விதிகளுக்கு இணக்கமாக நடப்பது மற்றும் ஒழுங்குமுறை தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்க ஒரு ஆலோசனைக் குழுவை அமைப்பதாக பேடிஎம் நிறுவனம் வெள்ளிக்கிழமை கூறியது.

இந்நிலையில், பேடிஎம் வங்கிப் பிரிவின் முக்கியப் பொறுப்பில் இருந்த மஞ்சு அகர்வால் பதவி விலகி இருப்பது அந்த நிறுவனத்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

வாட்ஸ்அப்பில் ஸ்பேம் தொல்லையா? லாக் ஸ்கிரீனிலும் பார்த்தவுடன் பிளாக் செய்வது ரொம்ப ஈஸி!

Paytm Director Manju Agarwal Resigns Amid RBI Clampdown On Payments Bank  sgb

பேடிஎம் (Paytm) பேமெண்ட்ஸ் வங்கியில் சரியான அடையாளம் இல்லாமல் உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கணக்குகள் காரணமாக ரிசர்வ் வங்கி அந்த நிறுவனம் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

1,000க்கும் மேற்பட்ட பயனர்கள் பான் எண்ணை (PAN) தங்கள் கணக்குகளுடன் இணைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மற்றும் தணிக்கையாளர்கள் இருவரும் நடத்திய சரிபார்ப்பின்போது பேடிஎம் பேமெண்ட் வங்கி சமர்ப்பித்த தகவல்கள் தவறானவை எனக் கண்டறியப்பட்டது.

பிப்ரவரி 29க்குப் பிறகு ஏற்கெனவே உள்ள கணக்குகள் மற்றும் வாலட்களில் புதிய டெபாசிட்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பல ஸ்டார்ட்அப் தலைவர்கள் பேடிஎம் மீது ஆர்பிஐ எடுத்துள்ள நடவடிக்கையைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியபோதும், ரிசர்வ் வங்கி தனது முடிவில் உறுதியாக இருக்கிறது.

இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில் இன்று முதல் UPI சேவை அறிமுகம்!

Follow Us:
Download App:
  • android
  • ios