தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் இந்த தருணத்தில் ஒரு சவரன் தங்க விலை இன்று 27 ஆயிரத்தை கடந்து உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிராமுக்கு 62 ரூபாய் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தான் ஒரு சவரன் விலை 25 ஆயிரத்தை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜூன் மாதம் 26 ஆம் தேதி 26 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தங்கம் உயர்ந்து, ஒரே நாளில் 900 ரூபாய் வரை அதிகரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 62 ரூபாய் அதிகரித்து 3372 ரூபாய்க்கும், சவரன் ரூபாய் 26 ஆயிரத்து 976 ரூபாய்க்கு விற்பனையானதது. அதேபோன்று ஒரு கிராம் வெள்ளி 60 பைசா குறைந்து ரூபாய் 44.30 விலைக்கு விற்பனையானது. 

மாலை நேர நிலவரப்படி..! 

கிராம் ஒன்றுக்கு,11 ரூபாய் உயர்ந்து 3383.00 ரூபாயாகவும், 27 ஆயிரத்து 64 ரூபாய்க்கு  விற்கப்படுகிறது. அதாவது இன்று ஓரே நாளில் கிராமுக்கு 73 ரூபாய் அதிகரித்து,சவரனுக்கு 584 ரூபாய் அதிகரித்து உள்ளது. சவரன் விலை 27 ஆயிரம் நெருங்க இருந்த தருணத்தில் தற்போது ஒரே நாளில் சவரனுக்கு 584 ரூபாய் உயர்ந்ததால் 27 ஆயிரத்தை தாண்டியது.