Asianet News TamilAsianet News Tamil

Ola electric scooter: ஓலா இமேஜ் டேமேஜ் ஆகுதா? பேட்டரி தீ.. இப்போது ஃபோர்க் கழன்றது

Ola electric scooter :ஓலா நிறுவனம் தயாரித்து வெளியிட்ட பேட்டரி ஸ்கூட்டர்களில் பேட்டரி திடீரென்று தீப்பிடித்த சம்பவங்கள் நடக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து அவற்றை அந்நிறுவனம் திரும்பப்பெற்றது.

Ola electric scooter : Ola electric scooter front suspension comes off while driving in latest mishap
Author
New Delhi, First Published May 27, 2022, 3:21 PM IST

ஓலா நிறுவனம் தயாரித்து வெளியிட்ட பேட்டரி ஸ்கூட்டர்களில் பேட்டரி திடீரென்று தீப்பிடித்த சம்பவங்கள் நடக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து அவற்றை அந்நிறுவனம் திரும்பப்பெற்றது.

இந்த சம்பவத்தில் அந்த நிறுவனத்தின் மதிப்பு படுமோசமாக சரிந்தநிலையில் அடுத்த சம்பவமாக ஓலா இ-ஸ்கூட்டரின் முன்பகுதி (ஃபோர்க்) ஷாக்அப்ஸர்வர் தனியாக கழன்ற சம்பவம் நடந்துள்ளது.

Ola electric scooter : Ola electric scooter front suspension comes off while driving in latest mishap

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இது குறித்த செய்தியை நியூஸ்-18 சேனலும் வெளியிட்டுள்ளது. ஓலா இ-ஸ்கூட்டரின் முன்பகுதி சஸ்பென்ஷன் ஃபோர்க் கழன்றும், முன்பகுதி சக்கரம் தனியாகவும் கழன்று புல்தரையில் சரிந்துகிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

ட்விட்டரில் வெளியாகியுள்ள அந்த புகைப்படத்தில் பதிவிட்ட கருத்தில் “ குறைந்தவேகத்தில்தான் சென்றதற்கே முன்பகுதி ஃபோர்க் கழன்றுள்ளது. தீவிரமான ஆபத்தான விஷயத்தை எதிர்கொள்கிறோம். ஆதலால், ஓலா ஸ்கூட்டரின் முன்பகுதி வடிவமைப்பை மாற்றிஅமைத்து எங்கள் உயிரை சாலைவிபத்துகளில் இருந்து காக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மிகவும் தரமற்ற பொருட்களால் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தநபர் ஓலா இ-ஸ்கூட்டர் புகைப்படங்களை ஓலா நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வாலுக்கும் டேக் செய்துள்ளார். இந்த ட்விட் ட்ரண்டாகியதும் பலரும் ஓலா ஸ்கூட்டரால் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை பட்டியிலிட்டனர். 

Ola electric scooter : Ola electric scooter front suspension comes off while driving in latest mishap

ஓலா நிறுவனம் மிகவும்தரமற்ற பொருட்களால் ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது என்று சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். சிலர் ஓலா ஏமாற்றிவிட்டது என்றும் சிக்கவைத்துவிட்டது என்று விமர்சித்துள்ளனர்.

ஏற்கெனவே ஓலா ஸ்கூட்டரின் பேட்டரியில் தீ பிடித்த சம்பவத்தால் 1,441 வாகனங்களை திரும்பப்பெற்று.இப்போது ஃபோர்க் கழன்ற சம்பவத்தால் ஓலாவின் இமேஜ் மிகவும் டேமேஜாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios