Asianet News TamilAsianet News Tamil

nse scam news: சிபிஐ அமைப்பை திணறவிடும் இமயமலை யோகி யார்? சித்ரா, ஆனந்த் மீது விரைவில் குற்றப்பத்திரிகை

nse scam news: தேசியப்பங்குச் சந்தையில் நடந்த கோ-லொகேஷன் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, அவரின் முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் மீது 10 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

nse scam news: CBI yet to zero in on Yogi; charges sheet ikely in 10 days
Author
New Delhi, First Published Mar 30, 2022, 10:54 AM IST

தேசியப்பங்குச் சந்தையில் நடந்த கோ-லொகேஷன் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, அவரின் முன்னாள் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் மீது 10 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

nse scam news: CBI yet to zero in on Yogi; charges sheet ikely in 10 days

அதேநேரம், கோ-லோகேஷன் வழக்கில், சித்ரா ராமகிருஷ்ணாவை ஆட்டுவித்த, முகம் தெரியாத இமயமலை யோகி யார் என்பதை இதுவரை உறுதி செய்யமுடியாமல் சிபிஐ திணறிவருகிறது. இமயமலை யோகியின் அறிவுரையின்படிதான் என்எஸ்இ அமைப்பை நடத்தியதாக சித்ரா வாக்குமூலத்தில் கூறிநிலையில் அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கோ-லோகேஷன் ஊழல்
என்எஸ்இ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே, சில குறிப்பிட்ட பங்குதரகு நிறுவனங்களின் சர்வர்கள் வைக்கப்பட்டன. இதனால், பங்குவிற்பனை, விலை, பரிமாற்றம் குறித்த தகவல்கள் விரைவாக அந்த தரகு நிறுவனங்களுக்குக் கிடைத்தால், கோடிக்கணக்கில் லாபமீட்டின. இது தொடர்பான புகார் எழுந்ததையடுத்து, கடந்த 2018ம்ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வந்தது.

nse scam news: CBI yet to zero in on Yogi; charges sheet ikely in 10 days

அபராதம்

இதற்கிடையே சித்ரா தனது பதவிக்காலத்தில் தனக்கு ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்தார். அவருக்கு குறுகிய காலத்தில் ஆண்டுக்கு ரூ.4.50 கோடிக்கு  ஊதிய உயர்வு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
 இந்தக் குற்றச்சாட்டு குறித்து செபி விசாரி்த்தில், என்எஸ்இ அமைப்பை இமயமலை யோகி ஒருவரின் ஆலோசனையின்படி நடத்தியதாகவும், பல்வேறு ரகசிய தகவல்கள் அவருடன் மின்அஞ்சலில் சித்ரா பகிர்ந்ததும் தெரியவந்தது, சித்ராவை கைப்பாவையாக யோகி நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, சித்ராவுக்கு ரூ.3 கோடி, ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு ரூ.2 கோடி அபராதமும் விதித்தது.

கைது
கோ-லொகேஷன் வழக்கு குறித்து விசாரித்த சிபிஐ, ஆனந்த் சுப்பிரிமணியம், சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தியது. இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். சித்ராவுக்கு ஏற்கெனவே ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் 2-வது முறையாக மனுத்தாக்ககல் செய்துள்ளார். அதேபோல ஆனந்த் சுப்பிரமணியத்துக்கும் 2 முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையே என்எஸ்இ முன்னாள் தலைவர் அசோக் சாவ்லா கடந்த 2018ம் ஆண்டு செபிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் “ இமயமலை யோகி வேறு யாருமில்லை, ஆனந்த் சுப்பிரமணியன்தான். இஒய். நிறுவனம் நடத்திய தணிக்கை ஆய்வில் இது தெரியவந்தது” எனத் தெரிவித்துள்ளார்

nse scam news: CBI yet to zero in on Yogi; charges sheet ikely in 10 days

யார் அந்த யோகி

இந்தவழக்கு குறித்துசிபிஐ தரப்பில் கூறுகையில் “ வழக்கை விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகளும், ஆனந்த் சுப்பிரமணியன்தான் யோகிமின்அஞ்சலை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அவர் இயக்காமல் வேறுஒருவரை வைத்து இயக்கியிருக்கலாம் என்று நம்புகிறார்கள். இந்த வழக்கில் அடுத்த 10 நாட்களில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

2016ம் ஆண்டு சித்ரா சிஇஓ பதவியிலிருந்து விலகியவுடன், சுப்பிரமணியன் விசாரணை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டார். சித்ராவை கடந்த பிப்ரவரி 25ம் தேதி சிபிஐ விசாரணை நடத்தியதும், மறுநாள் ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். மார்ச் 6ம் தேதி சித்ரா கைது செய்யப்பட்டார். 

nse scam news: CBI yet to zero in on Yogi; charges sheet ikely in 10 days

திணறல்

விசாரணையின்போது, யோகி அனுப்பிய மின்அஞ்சல்களை சுப்பிரமணியம் அனுப்பவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால், பல்வேறுதகவல்களில் யோகி வேறுயாருமில்லை ஆனந்த் சுப்பிரமணியன் என்று கூறுகின்றன என்பதால், யோகி யார் என்பதை கண்டுபிடிப்ப முடியாமல் சிபிஐ திணறி வருகிறது.

nse scam news: CBI yet to zero in on Yogi; charges sheet ikely in 10 days

இந்த வழக்கில் தேசியப்பங்குச்சந்தை, செபி அதிகாரிகள் சிலரையும் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர இருக்கிறது. செபி,என்எஸ்சி அதிகாரிகளுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் அதை மறைக்கப்படுகிறது. அதுகுறித்தும் சிபிஐ விசாரிக்க இருக்கிறது” எனத் தெரிவிக்கின்றன
 

Follow Us:
Download App:
  • android
  • ios