NSE co-location scam :தேசியப் பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் ஊழல் வழக்கில் ஒபிஜி செக்யூரிட்டீஸ் நிறுவன்தின் அதிபர் சஞ்சய் குப்தாவை சிபிஐ கைது செய்துள்ளது. 

தேசியப் பங்குச்சந்தையில் நடந்த கோ-லொகேஷன் ஊழல் வழக்கில் ஒபிஜி செக்யூரிட்டீஸ் நிறுவன்தின் அதிபர் சஞ்சய் குப்தாவை சிபிஐ கைது செய்துள்ளது. 

இ்ந்த கோ-லொகேஷேன் வழக்கில் ஏற்கெனவே என்எஸ்இ முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா,ஆனந்த் சுப்பிரமணியம் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சித்ரா ராம்கிருஷ்ணன் என்எஸ்இ சிஇஓவாக 2013 முதல் 2016ம் ஆண்டுவரை இருந்த காலத்தில் கோ-லொகேஷன் ஊழல் நடந்தது. அதாவது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே சில குறிப்பிட்ட பங்கு தரகர்களின் சர்வர்கள் வைக்கப்பட்டு, பங்குபரிவர்த்தனை தகவல்கள் விரைவாகப் பகிரப்பட்டு, ஆதாயம் அடைந்ததாக புகார் எழுந்தது. 

இந்த கோலொகேஷன் ஊழல் வழக்குத் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சித்ரா ராம்கிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியன் இருவரையும் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். தற்போது இருவரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோலெகேஷன் வழக்கில் டெல்லியைச் சேர்ந்த ஒபிஜி செக்யூரிட்டீஸ் நிறுவனம் அதிக ஆதாயம் அடைந்ததாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தது.

இ்ந்நிலையில் ஒபிஜி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் குப்தாவை நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய விசாரணையில் செபி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து கோலொகேஷன் ஊழல் தொடர்புடைய ஆவணங்களை அழிக்க சஞ்சய் குப்தா திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் சின்டிகேட் அமைத்து அவர்கள் மூலம் சிபிஐ அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க சஞ்சய் குப்தா முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக செபி மற்றும் என்எஸ்இ அதிகாரிகளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். 
இதையடுத்து, விசாரணையைத் தீவிரப்படுத்திய சிபிஐ அதிகாரிகள் சஞ்சய் குப்தாவை நேற்று இரவு கைது செய்தனர்.